உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

5

நால்விரற்கிடைக்கப்பாற் போய் நிற்பின், பேந்தாவிற் குள்ளிருக் குங் கோலியை அடித்தல் வேண்டும். அவ்வாறு அடித்த பின், அடிக்கப்பட்ட கோலியன்றி அடித்த கோலி பேந்தாவிற்குள்ளும் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்குள்ளும் நிற்றல் கூடாது; நிற்பின் தவறாம். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அங்ஙனமன்றிப் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்கப்பாற் போய் நிற்பின், அடித்தவன் மீண்டும் உத்திக்குச் சென்று அதன்மேல் நின்றுகொண்டு, எதிரியின் கோலியை அடித்தல் வேண்டும். அங்ஙனம் அடிக்குமுன், எதிரியின் கோலி பேந்தா விற்கு வெளியில் நிற்பின், “பேந்தா செத்து ஆறு மாசம்” என்று கூறுதல் வேண்டும்; அல்லாக்கால் தவறாம். தவறிய போதெல்லாம் ஆடகன் மாறல் வேண்டும்.

அடிப்பவன் மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும் போது, எதிரியின் கோலியை மூன்று தரம் தொடர்ந்து அடித்தல் வேண்டும். அதனால் எதிரியின் கோலி பேந்தாவிற்குத் தொலைவிற்

போக்கப்படுவதுண்டு.

மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும்போது, எதிரியின் கோலி பேந்தாவிற்குள் இல்லாக்கால், அடிக்குங் கோலி பேந்தாவிற்குட் சென்று நிற்பினும் குற்றமில்லை.

ஒருவன் பேந்தாவின் அருகிற்போய் நின்ற தன் கோலியால் எதிரியின் கோலியை அடிக்கும்போது, "பேந்தாமேற் கைபடும்” என்று அடி ப்பவன் முந்திச் சொல்லினும், "பேந்தாமேற் கைபடக்கூடாது என்று அடிக்கப்படும் கோலிக்காரன் முந்திச் சொல்லினும், அவ்வாறே நிறைவேற்றப்படல் வேண்டும்.

று

அடிக்கப்படும் கோலி ஒரு பள்ளத்திலிருப்பின், அடிப்பவன் “நேர்” என்று சொல்வான். உடனே, அடிக்கப்படும் கோலியை எதிரி எடுத்து அடிப்பவனுக்கு எதிராகப் பள்ளநேருக்குச் சமநிலத்தில் வைத்தல் வேண்டும்.

அடிக்கப்படும் கோலி ஓர் இடுக்கிலிருப்பின் அடிப்பவன் "சாண்சூடி சடாபுடா” என்று சொல்வான். உடனே எதிரி அதை எடுத்து அடிப்பவனுக்குத் தெரியும்படி வைத்தல் வேண்டும். "சாண்சூடி சடாபுடா இல்லை” என்று எதிரி முந்திச் சொல்லிடின், அதை எடுத்து வைக்க வேண்டுவதில்லை.

66

>