உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

தமிழ்நாட்டு விளையாட்டுகள் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் மீண்டும் பின்னாக இருக்கும் கையை முன்னாக எடுத்து வைப்பான். அடிக்கிறவன் கோலிக் கை எதுவென்றும் வெறுங்கை எதுவென்றும் தெரியாமல், “போதாது “போதாது” என்று மேலும் மேலும் சொல்லச் சொல்லத், தள்ளுகிறவன் தன் இரு கைகளையும் மாறி மாறி முன்னாக எடுத்து வைத்து, இறுதியில் கோலிக் கையைக் குழிமேல் வைத்துக்கொண்டு, “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் குழிக் கையை வெறுங்கை என்று கருதிக்கொண்டு, “போதும்” என்பான்; உடனே தள்ளுகிறவன் தன் கோலியைக் குழிக்குள் இட்டுவிட்டுத் தன் கையை எடுத்துவிடுவான்; அடித்தவன் ஏமாறிப் போவான்; தள்ளினவன் கெலித்துவிடுவான். இதற்கு மீன் பிடித்தல் என்று பெயர்.

தள்ளுகிறவன் மீன் பிடிக்கலாமா பிடிக்கக் கூடாதா என்பது, முட்டி தள்ளு முன்னரே முடிவு செய்யப்பெறும்.

III. இருகுழியாட்டம் (இஷ்டம்)

ஆட்டின் பெயர் : சுவரடி அரங்கிற்குள் இரு குழி வைத்தாடும் கோலியாட்டு வகை இருகுழியாட்டம் எனப்படும். இதற்கு இட்டம் (இஷ்டம்) அல்லது கிசேபி என்றும் பெயர்.

சுவர்

குழிகள்

அரங்கு

டாப்பு

உத்தி

இ வ் ஆட்டு பெரும்பாலும் திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில்

ஆடப்பெறுவதாகும்.