உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

13

ஆடுவார்தொகை : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் அல்லது (இருவர்க்கு மேற்பட்ட) பலர் இதை ஆடுவர்.ஓர் ஆட்டையில் இருவரே இதை ஆட முடியுமாதலால், பலர் ஆடுவதாயின் இவ்விருவராகவே ஆடக்கூடும்.

ஆடு கருவி : சுவரடி (அல்லது மேட்டடி) நிலத்தில், ஏறத்தாழ 3 அடி நீளமும் 2 அடி அகலமுமுள்ள ஒரு நீள் சதுர அரங்கமையுமாறு ஒர் அகன்ற பகரக்கோடு கீறிக் கொள்ளல் வேண்டும். அவ் வரங்கின் நெடும்பக்கங்களுள் ஒன்று சுவரடியாயிருக்கும் வண்ணம், பகரத்தின் இரு பக்கக் கோட்டு முனைகளும் சுவரைத் தொடுதல் வேண்டும். அவ் வரங்கிற்கும் இடவலமாக இரு குழிகள் கில்லல் வேண்டும்.

அரங்கிற்கு ஏறத்தாழ முக்கசத் தொலைவில் ஓரடி நீளம் உத்தி கீறப்படும். அதற்கு டாப்பு (Top) என்னும் மூடி இடப்படும்.

L

இன்னொருவனுக்குக்

ஒருவன் ஆடும்போது கோலி தேவையாயிராமையின், ஆடகர் எல்லார்க்கும் பொதுவாக முக்கோலி யிருந்தாற் போதும். அவற்றுள்,இரண்டு உருட்டுவன; ஒன்று அவற்றை அடிப்பது. அடிக்குங் கோலி சற்றுப் பெரிதாகவிருக்கும். அதற்குத் திருச்சிராப்பள்ளிப் பாங்கரில் குட்டு அல்லது தெல் என்று பெயர்.

ஆடிடம்:சுவரடி நிலமும் மேட்டடி நிலமும் இதை ஆடுமிடமாம்.

ஆடுமுறை : தோற்றவன் கெலித்தவனுக்கு இவ்வளவு காசு காடுத்தல் வேண்டுமென்று முன்னதாக முடிவு செய்து கொண்டு, உடன்பாட்டின்படியோ திருவுளச் சீட்டின்படியோ யாரேனும் ஆடுவார் எல்லார்க்கும் கோலி பொதுவாயின், கோலிக்குச் சொந்தக்காரன் முந்தியாடுவது வழக்கம்.

ஒருவன் முந்தியாடுவன்.

ஆடுகிறவன் உத்தியில் நின்றுகொண்டு, முதலாவது இரு சிறு கோலிகளையும் அரங்கிற்குள் உருட்டி, அவற்றுள் எதை

அடிக் க்க க வேண்டுமென்று எதிரியைக் கேட்பான். அவ் இரண்டினுள் ஆடுகிறவனுக்குக் கிட்ட இருப்பதை அடிக்க