உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

35

உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பம்பரம் மேலும் மேலும் குத்தப்பட்டுச் சேதமாகாதபடி, அதன் சொந்தக்காரன் ஆட்டிக் காண்டிருக்கும் பம்பரக்காரருள் ஒருவனிடம், “நீ இன்று என் பம்பரத்தை வெளியேற்றின், உன் பம்பரம் உள்ளிருக்கும் போது நான் வெளியேற்றுவேன், என்று ஒப்பந்தஞ் செய்து

கொள்வதுண்டு.

பல பம்பரங்கள் உள்ளே வைக்கப்பட்டுக் கிடப்பின், அவையனைத்தும் வெளியேற்றப்பட்ட பின்புதான் அபிட்கோசு எடுக்கப்படும்.

இங்ஙனம் மீண்டும் மீண்டும் வேண்டும் அளவு தொடர்ந்து ஆடப்பெறும்.

வட்டத்துள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரங்களுள் நண்பனதை வெளியேற்ற வேண்டுமென்றும், பிறனதை வெளியேற்றக்

கூடாதென்றும், இருவேறு நோக்குக் கொண்டு அதற்கேற்பப் பம்பரத்தை ஆட்டுவது வழக்கம்.

IV. இருவட்டக் குத்து

வட்டத்துள் வட்டமாக இருவட்டம் கீறி அவ் விரண்டுள்ளும் பம்புரத்தைக் குத்துவது, இருவட்டக்குத்து. இது பெரும்பாலும் பம்பரக் ம் குத்துப் போன்றதே.

இதன் உள்வட்டத்தில் மாங் காட்ட

பட்டவைத்து வெளியேற்றி அபிட்கோ செடுத்துப்

பிந்தியவன் பம்பரத்தை அதனுள் வைத்தபின், அதைக் குத்தி வெளியேற்றுவர். மட்டையும் சாட்டையும் உள் வைக்கப்படும். உள் வட்டத்தில் ஆடும் பம்பரம் வெளி வட்டத்துள்ளும் வந்து ஆடலாம். ஆடும் பம்பரத்தை அழுத்துவது

உள்வட்டத்தில்தான் நிகழும்; ஆயின், அதைக் குத்துவது இருவட்டத்திலும் உண்டு. வெளிவட்டத்துள் ஆடும் பம்பரம் தானாய் நகர்ந்து வெளியேறிவிடின், அதை உடையவன் எடுத்து ஆட்டலாம்; அன்றி உள்ளேயே ஓய்ந்துவிடின் அதை எடுத்தல் கூடாது. அதுவும் மட்டைபோற் பாவிக்கப்படும்.