உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

V. தலையாரி

ஆடுவார் தொகை : மூவர்க்குக் குறையாத சிறுவர் பலர் இதை

ஆடுவர்.

ஆடு கருவி : ஆளுக்கொரு பம்பரமும், ஏறத்தாழ இருபது கசம் இடையிட்ட இரு சம அளவான வட்டங்களும், ஒருபோகாக(அதாவது சமதூரமாக) இருபுறமும் நீட்டப்பட்ட அவற்றின் விட்டங்களும், இவ் விளையாட்டிற்குரிய கருவிகளாம்.

ஆடுமுறை : முதலாவது ஒரு வட்டத்தின் நடுவிலுள்ள மாங்கொட் காட்டையைப் பம்பரத்தின் மூலமாய் வெளியேற்றி, அபிட்கோசெடுத்து அதிற் பிந்தியவன் பம்பரத்தை உள்வைத்து, அதை னையோரெல்லாம் ஒவ்வொருவனாய்ப் பம்பரமேற்றி வளியேற்றுவர். அங்ஙனம் வெளியேற்றும்போது வட்டத் திற்கு வலப்புறமாய் வெளியேற்றல் வேண்டும்; இல்லாவிடின் மீண்டும் அபிட்கோசெடுத்துப் பிந்தியவன் பம்பரத்தை உள்ளே வைக்க வேண்டியிருக்கும்.

வெளியேற்றப்பட்ட பம்பரத்தை நேரே எதிருள்ள வட்டத்திற்குப் பம்பரத்தின் மூலமாய் அடித்துக்கொண்டு

போவர்.

ஒருவன் இடையில் மட்டை வீழ்த்தினும் சாட்டை போக்கினும், கீழிருக்கும் பம்பரத்திற்குப் பதிலாகத்தனதை வைத்துவிடல் வேண்டும். முன்பு கீழிருந்த பம்பரக் கார பின்பு பிறரொடு சேர்ந்து ஆடுவான்.

ன்

அடித்துக்கொண்டு போகப்படும் பம்பரம் எதிர்வட்டத்துள் சேர்ந்தவுடன், பிற பம்பரக்காரரெல்லாம் தம் சாட்டை களைக் கழுத்திற் சுற்றிக்கொண்டு, அதைப் பம்பர ஆணியால் ஒவ்வொரு தடவை குத்துவர். குத்தும்போது சாட்டை தளர்ந்து நிலத்தைத்

தொடின், குத்தப்படும் பம்பரக்காரன் தன் சாட்டையால் வன்மையாய் அடித்துவிடுவான்.