உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

எதிர்க்கட்சியார் அந்தரத்திற் பிடித்துவிட்டால், எறிந்தவன் தொலைவான். அதன்பின் எதிர்க்கட்சியாருள் ஒருவன் அவ்வாறு ஆடல் வேண்டும். திரி பிடிக்கப்படாவிடின், ஒருவன் எத்தனை முறையும் ஆடலாம். திரி மனைக்குட் புகாமல் எல்லைக்கு வெளியே வீழினும் எறிந்தவன் தொலைவான்.

66

66

66

99.66

தவறாத ஒவ்வோர் எறிவும், காணம் விளைத்துக் குதிரைக்குக் கட்டற்குரிய ஒவ்வொரு வினையாக முறையே தொடர்ந்து கூறப்படும். முதல் எறிவில், “உழுதாயிற்று” என்றும்; இரண்டாவதில், 'விதைத்தாயிற்று” என்றும்; மூன்றாவதில், “முளைத்துவிட்டது” என்றும்; இங்ஙனமே தொடர்ந்து மேற்பட்டவற்றில் முறையே, "ஓர் இலக்கு விட்டிருக்கிறது”, “ஈர் இலக்கு விட்டிருக்கிறது”, “மூவிலக்கு விட்டிருக்கிறது”, ‘நாலிலக்கு விட்டிருக்கிறது”, 'ஐயிலக்கு விட்டிருக்கிறது”, “ஆறிலக்கு விட்டிருக்கிறது”, “ஏழிலக்கு விட்டிருக்கிறது”, “எட்டிலக்கு விட்டிருக்கிறது”, “ஒன்பதிலக்கு விட்டிருக்கிறது”, “பத்திலக்கு விட்டிருக்கிறது”, “கொடியோடி யிருக்கிறது”, “பூப்பூத்திருக்கிறது”, “பிஞ்சுவிட்டிருக்கிறது”, “காய் காய்த்துவிட்டது”, காணத்தை அறுத்தாயிற்று”, “களத்தில் அடித்தாயிற்று”, ‘வீட்டிற்குக் கொண்டுவந்தாயிற்று”, “அடுப்பில் வேகிறது”, “குதிரைக்கு வைத்திருக்கிறது”, என்றும் கூறப்படும். அடுத்த எறிவில், எதிர்க்கட்சியார் குனிய, வென்ற கட்சியார் கட்சியார் அவனவன் த்திப்படி அவர்மேல் ஏறிக்கொள்வர். குறித்த தொலைவாவது, குறித்த தடவை ஒரிடத்தைச் சுற்றியாவது, தோற்ற கட்சியார் வென்ற கட்சியாரைச் சமந்து செல்லவேண்டும். அதோடு ஓர் ஆட்டை முடியும்.

66

66

ஆட்டுத் தோற்றம் : இவ் விளையாட்டு ஒருகால் உழிஞைப் போரினின்று தோன்றியிருக்கலாம்.

ஒரு நகர் அல்லது தலைநகர் நீண்டகாலமாக முற்றுகை யிடப்பட்டிருக்கும்போது, நொச்சியார் (அதாவது அடைபட்டுள்ள நகரத்தார்) தமக்கும் தம் கால்நடைகட்கும் வேண்டும் உணவுப் பொருள்களை, நகரக் குடியிருப்பிற்கும் புறமதிற்கும் இடைப்பட்ட நிலத்திலேயே விளைத்துக் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.