உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

43

தொட்டுவிடின் தொடப்பட்டவன் மூட்டையை வாங்கித் தன் பிடரிமேல் வைத்துக்கொண்டு கீழே உட்கார உட்கார வேண்டும். முன் கீழே உட்கார்ந்திருந்தவன் பின்பு பிறரைத் தொடுபவனாவன். முன்பு தொட்டவன் பின்பு பிறரொடு சேர்ந்து மூட்டையில் அடித்து விளையாடுவான்.

இங்ஙனமே, நெடுகலும், தொடப்பட்டவன் மூட்டை வைத்திருப்பவனாகவும், மூட்டை வைத்திருந்தவன் தொடுபவனா கவும், தொட்டவன் மூட்டையில் அடித்து விளையாடுபவனாகவும், மாறிக்கொண்டே வருவர்.

புதிதாய்த் தொடுபவனாகும் ஒவ்வொருவனும், முதலாவது மூட்டையில் இரண்டடி யடித்துவிட்டுக்கூழ் குடிக்கப் போவதும், பின்பு மீண்டும் பிறரைத் தொடுவதும் மரபாம்.

மூட்டையில் அடித்து மகிழும் ஒவ்வொருவனும் பின்பு மூட்டை தாங்கி அடிவாங்குவதற்கு இடமிருத்தலால், முன்பு பிறன் முதுகில் மூட்டையிருந்தபோது கண்ணோட்டமின்றி வன்மையாய் அடித்தவன். பின்பு தன் வினைவிளைவை மிகுதியாய் அறுக்க நேரும்.

விளையாட்டு முடிந்தபின், அவனவன் துணியை அவனவன் எடுத்துக்கொள்வான்.

6

ஆட்டுத் தோற்ற விளக்கம் : வண்ணாருள் ஒவ்வொருவ னுக்கும் ஒவ்வொருதுறையுண்டு. ஒருவன் இன்னொருவன் துறையில் வெளுப்பது, வசதிக் குறைவுமட்டுமன்றி இழப்பு முண்டுபண்ணும். பழங்காலத்தில் ஒவ்வொரு வண்ணானு ம் வண்ணாரப் பாட்டம் அல்லது வண்ணாரப் பாறை என்னும் தொழில் வரிசெலுத்த வேண்டியிருந்தது. அதனால் ஒருவன் பாறையில் இன்னொருவன் வெளுப்பது, மிகக் கண்டிப்பாய்த் தடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆயினும், ஒருவன் பாறை மிக வசதியுள்ளதாகவிருப்பின், அவன் தான் வழக்கமாக உண்ணுங் கூழுண்ணச் சென்றிருக்கும்போது, பிறர் அவன் பாறையைப் பயன்படுத்தியிருப்பர். அவன் மீண்டு வரும்போது, அவர் ஓடியிருப்பர். அவன் அவரைத் துரத்தி அடித்திருப் பான், அல்லது கடுமையாய்த் திட்டியிருப்பான்.

ச சயலையே

வ் விளையாட

இவ்

ட்டு

உணர்த்துகின்றது.

தொடுபவன் வண்ணானையும், மூட்டை பாறையையும், அதில் அடிப்பவர் அவன் கூழுண்ணச் சென்றிருக்கும்போது அதைப்