உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

2. வண்ணான் தாழி

ஆட்டின் பெயர் : பாண்டி நாட்டில், வண்ணாரக் குலத்தை யும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளையும் சேர்ந்த சிறுவர், வண்ணான் துறையில் ஆடையொலிப்பது போல் நடித்தாடும் ஆட்டு வண்ணான் தாழி. தாழி என்பது அலசுவதற்குத் துணிகள் வைக்கப்பட்டிருக்கும் பெரும்பானை.

ஆடுவார் தொகை : பொதுவாக, நால்வர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.

ஆடுகருவி: ஒரு துணி மூட்டை இதற்கு வேண்டுங் கருவியாம். ஆடிடம் : ஊர்ப் பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இது ஆடப்பெறும்.

ஆடுமுறை : ஆடுவார் அனைவரும் ஒவ்வொரு துணி போட வேண்டும். அவை ஒரு மூட்டையாகக் கட்டப்படும். அதை ஒருவன் எடுத்துத் தன் பிடரியில் பிடரியில் வைத்துக்கொண்டு, மருள்கொண்ட தேவராளன்போல் ஆடி வரிசையாய் நிற்கும் ஏனையோருள் ஒருவன்மேல் கண்ணை மூடிக்கொண்டு எறிவான். அது யார்மேல் விழுந்ததோ அவன் அதைத் தன் பிடரியில் வைத்து இருகையாலும், பிடித்துக்கொண்டு கீழே உட்கார வேண்டும். மூட்டையை எறிந்தவன், அதில் இரண்டோர் அடியடித்துவிட்டு, “கூழ் குடிக்கப் போகிறேன்,’ என்று சொல்லிச் சுற்றுத் தொலைவுபோய் மீள்வான். அதற்குள் ஏனையோரெல்லாம் அம் மூட்டையில் தொப்புத்தொப்பென்று அடித்து மகிழ்வர். போய் மீண்டவன் அவருள் ஒருவனைத் தொட முயல்வான். அவன் அணுகியவுடன் அனைவரும் ஓடிப்போவர். அவன் ஒருவனைத் தொடுமுன் இன்னொருவன் மூட்டையில் அடித்துவிடின்,அத்தொடுகை கணக்கில்லை. இன்னொருவன் மூட்டையில் அடிக்குமுன் ஒருவனைத்