உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

47

(3)

ருபொழுதாட்டு

பகலும் இரவும் ஆடப்படும் ஆட்டு இருபொழுதாட்டாம். 1. கிளித்தட்டு

முகவுரை : தமிழ்நாட்டில் பெருவாரியாக விளையாடப் படும் விளையாட்டுகளில் இரண்டாவது கிளித்தட்டு. இது கிளியந்தட்டு எனவும் வழங்கும். இஃது ஆடவர் விளையாட்டு.

தோன்றிய வகை: நன்செய் புன்செய்களிலும் போர் அடிக்கும் களங்களிலும் அறுவடைக் காலத்தில், சிந்திச் சிதறிக் கிடக்கும் கூல (தானிய) மணிகளை எறும்புகள் ஈர்த்துக் கொண்டு போய், நிலத்தின் கீழும் மண் சுவரடியிலும் தங்கள் வளைகளில் படிக்கணக்காகவும் மரக்காற் கணக்காகவும் மழைக்கால உணவாகச் சேர்த்துவைப்பது இயல்பு. இங்ஙனம் சேர்த்து வைக்கப்பட்ட கூலத்திற்கு அடிபுல் அல்லது அடிப்புல் என்று பெயர். பஞ்சக்காலத்திலும் உணவில்லாத போதும் ஏழையெளியவர் இந்த அடிப்புல்லைத் தேடி அகழ்ந்தெடுப்பது வழக்கம்.

க்

கிளித்தட்டு

அடிப்புல் போன்றே ஏழை பாழைகட்கு வேறொரு வருவாயு முண்டு. அது கிளியீடு. அதாவது, கிளிகள் கழனிகளிலும் கொல்லைகளிலும் பயிர் பச்சைகள் விளைந்த பின்பு அவற்றின் கதிர்களைக் கொத்துக் கொத்தாய்க் கொத்திக்கொண்டுபோய் அண்மையிலுள்ள மரப்பொந்துகளில் இட்டு வைத்திருப்பது. இதைக் கண்டவர்கள் எடுத்துக்கொள்வார்கள். து அருமையாய் வாய்ப்பதெனினும் எளிதாகவும் ஏராளமாகவும் கிடைப்பதால், திடுமென ஓர் இரவலன் பெற்ற பெரும் பரிசிற்காவது எதிர்பாராது கிட்டிய பெருவருமானத்திற்காவது வமை கூறுவது

இதை