உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

வழக்கம். இதனால் ‘கிளியீடு வாய்த்தாற் போல' என்னும் உவமைப் பழமொழியும் எழுந்தது. இப் பழமொழிக் கருத்தை யமைத்தே,

66

'ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன் கிளிமரீஇய வியன்புனத்து

மரனணி பெருங்குரல் அனையன் ஆதலின் நின்னை வருதல் அறிந்தனர் யாரே

""

(புறம்: 138) என்று மருத னிளநாகனார், நாஞ்சில் வள்ளுவனைப் பாடினார்.

பாரியின் பறம்புமலை மூவேந்தரால் முற்றுகையிடப் பட்டிருந்தபோது, கபிலர் பல கிளிகளைப் பழக்கி அவற்றால் மலையடிவாரத்துக் கழனிகளிலுள்ள நெற்கதிர்களைக் கொணர் வித்து அவற்றைக்கொண்டு நொச்சிமக்களை உண்பித்தனர் என்றொரு

செய்தி வழங்கிவருகின்றது.

கிளிகள் சில சமயங்களில் வெட்டுக்கிளிகள் போலப் பன் னூற்றுக் கணக்கினவாய்ப் படலம் படலமாய் விளைபுலங்களில் வந்து விழுந்து கதிர்களை யெல்லாம் கொய்து தாமே செய்துவிடுவதுண்டு.இதனாலேயே,

“விட்டில் கிளிநால்வாய் தன்னரசு வேற்றரசு

நட்டம் கடும்புனல்கால் எட்டு"

அறுவடை

என்று நாட்டுக்குக் கேட்டை விளைப்பவற்றுள் கிளியையும் ஒன்றாகக் கூறினர் முன்னோர்.

விளைபுலங்களில் வந்து விழும் பறவைகளுள் பெருங் கேட்டை விளைப்பது கிளியாதலின்,விளைபுலத்திற் பறவையோட்டுதலுக்குக்கிளி கடிதல் அல்லது கிளியோப்புதல் என்றும், அதனை ஒட்டுங் கருவிக்குக் கிளிகடி கருவி அல்லது கிளிகடி கோல் என்றும் பெயர்.

6

கிளிகள் பெருந்தொகையாய் விளைபுலங்களில் வந்து வீழ்ந்தபோது, உழவர் அப் புலங்களிற் புகுந்து தட்டுத்தட்டாய் நின்று அக் கிளிகளை அடித்துத்துரத்தியும் அவை கொய்துகொண்டு போகும் கதிர்களைக் கவர்ந்ததும் வந்தனர். இவ் வழக்கத்தினின்றே கிளித்தட்டு என்னும் விளையாட்டுத்தோன்றியது.தட்டு என்பது ஒரு தவணையின் றுப்பாகும் பாத்தி வரிசை.