உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

49

விளையாடு முறை : ஊருக்கருகிலுள்ள ஒரு பொட்டலில் அல்லது வெளிநிலத்தில் சுமார் முப்பது அடி அகலமுள்ள ஒரு நீள் நாற்கோண வரப்புக்கோடுகள் பாதத்தால் இழுத்தமைக்கப்படும். அதன் ஓர் அகலப் பக்கத்தினின்று மற்றோர் அகலப் பக்கத்திற்கு நண்ணடுவில் நெடுக்காக ஒரு தவணைக்கோடு இழுக்கப்படும். அதன்பின் பாத்திகள் நாற்கோணமாய் அமையுமாறு அத் தவணைக் கோட்டிலிருந்து குறுக்காகத் தட்டுக்கோடுகள் இழுக்கப்படும். தட்டுக்கோட்டின் தொகை விளையாடுவாரின் தொகையைப் பொறுத்தது. அது ஒரு கட்சியினரின் தொகைக்கு ஒன்று குறைந்திருக்கும். தட்டின் தொகைக்குத் தக்கபடி கிளித்தட்டின் நீள் வரப்புக் கோடுகள் நீண்டிருக்கும்.

கிளித்தட்டுக் கோடு கீறு முன்பாவது கீறிய பின்பாவது, ஆடுவார் சமத்தொகையாக இரு கட்சியாய்ப் பிரிந்து கொள்வர். கட்சித் தலைவனுக்கு இவ் விளையாட்டில் கிளி என்று பெயர்.

6

விளையாடத் தொடங்குமுன், எந்தக் கட்சி தட்டுக்கட்டுவது என்றும், எந்தக் கட்சி தட்டிற்குள் இறங்குவது என்றும், தீர்மானிக்கப் படும். தட்டிற்குள் இறங்குவது தட்டிற்குள் புகுதல். தட்டிற்குள் இறங்கியவரை மேற்செல்லவிடாது தடுத்தல் தட்டுக்கட்டுதல்; இது தட்டு மறித்தல் என்றுங் கூறப்படும். ஒரு காசையாவது ஓட் ா ஞ் சல்லியையாவது எடுத்து, அதன் இருபக்கத்தையும் தனித்தனி இன்ன கட்சியாரது என்று ரையறுத்துப் பின் மேலெறிந்து அது கீழ்விழுந்ததும், அதன் மேற்பக்கத்திற்குரிய கட்சியார் இறங்குவர்; மற்றக் கட்சியார் மறிப்பர்.

6.

முதலாவது, மறிக்கின்ற கட்சியார் ஒவ்வொரு தட்டுக் கோட்டிலும் ஒருவராகப் போய் நின்றுகொள்வர். கிளித்தட்டின் இரு குறும்பக்கங்களில் ஒன்று புகும் பக்கமாகவும் இன்னொன்று புறப்படும் (வெளியேறும்) பக்கமாகவும் வசதிக்கேற்பக் குறிக்கப்படும். புகும் பக்கம் ஊர் நோக்கியும் புறப்படும் பக்கம் ஊர்ப்புறம் நோக்கியும் இருப்பது பெரும்பான்மை. புறப்படும் பக்கத்து வரப்புக் கோட்டில்கிளி நிற்பான். அவனுக்குத் தன் கோட்டிலும் மற்ற வரப்புக் கோடுகளிலும் செல்ல உரிமையுண்டு. பிறர்க்கு அவரவர் தட்டுக் கோட்டிலேயே செல்ல முடியும். புகும் பக்கத்து வரப்புக்கோடு வெறுமையாய் விடப்படும்.