உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

இயங்கும் கட்சியார் ஒவ்வொருவராய் அல்லது மொத்தமாய்த் தட்டிற்குள் புகுந்து, தட்டுக்காரனாலாவது கிளியினாலாவது தொடப்படாதபடி எட்டி நின்று, இருபுற நெடுவரப்புக்

கோட்டிற்கப்பால் கால் வையாது, மேற் சென்று வெளியேற முயல்வர். மறிக்கும் கட்சியார் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை மறித்துக்கொள்வர். ஒருவர் பலரை மறிக்க முடியாதாதலின், ஒவ்வொரு தட்டிலும் இயங்கியவருள் ஒருவருக்கு மேற்பட்டவர் மேல்தட்டிற்கு ஏறிவிடுவது எளிது. இங்ஙனம் முதல் தட்டுக்காரன் முதல் கிளிவரையில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை மறித்துக் கொண்டிருக்க நேரும். இறங்கியவர் ஒவ்வொருவரும் தம்மை மறிப்பவரை இடமும் வலமுமாக இடைவிடாது மறுக் காட்டிச் சிறிய இடை நேர்ந்தாலும் மேற்செல்லப் பார்ப்பார்.இம் முயற்சியில் யாராவது தொடப்பட்டுவிட்டால் அவர் கட்சி தோற்றுவிடும்.உடனே ஆட்டம் நிறுத்தப்பட்டு மறுபடியும் தொடங்கும்; வென்ற கட்சியார் இறங்குவர். இறங்கின கட்சியாருள் யாராவது ஒருவர் கிளிக்கும் தப்பியோடிக்குறிக்கப்பட்ட எல்லையை மிதித்துவிட்டால், அவர் கட்சியார் வென்றவராவர்; அடுத்த ஆட்டையிலும் அவரே இறங்குவர். கிளிக்குத் தப்பி ஒருவர் ஓடிவிட்டதைக் ‘கிளி போய்விட்டது’ என்னும் மரபுத்தொடராற் குறிப்பர்.

L

சோழநாட்டு முறை

சோழநாட்டில், இறங்கின கட்சியாருள் ஒருவன் ஒருமுறை கிளிக்குத் தப்பி ஓடினவுடன் ஆட்டை முடிந்துவிடாது. அங்ஙனம் ஒடினவன் குறித்த எல்லையிற் குவித்து வைத்திருக்கும் மண்ணிற் சிறிது ஒரு கையில் அள்ளிக்கொண்டு, மீண்டும் அரங்கிற்குட் புகுந்து, முன்பின்னாகத் திசைமாறித் தட்டுக்கட்டி நிற்கும் எதிர்க்கட்சியார் எல்லார்க்குந் தப்பித்தான் முதலிற் புகுந்த வழியாய் வெளியேறிவிடவேண்டும். அல்லாக்கால் தோல்வியாம்.

விளையாட்டு விளக்கம் : கிளித்தட்டு விளைபுலம்; கிளித் தட்டின் வரப்பு தவணை தட்டு பாத்தி என்பவை விளைபுலத்தின் வரப்பு தவணை தட்டு பாத்தி என்பவையாம். இறங்குபவர் கிளிகள்; மறிப்பவர் உழவர். இறங்குபவர் வெளியேற முயலுதல் கிளிகள் தாம் கொய்த கதிர்களைக் கௌவிக்கொண்டு பறந்துபோதல். மறிப்பவர் தடுத்தல் அக் கிளிகளைத் துரத்துதலும் அவை

களவிச்