உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

தமிழ்நாட்டு விளையாட்டுகள் என்றோ, ‘சடுகுடு குடு குடு குடு' என்றோ, 'பலீன் சடுகுடு குடுகுடு’ என்றோ, இடைவிடாது பாடிக்கொண்டு எதிர்க்கட்சியாருள் ஒருவனையோ, பலரையோ தொட்டுவிட்டு அவனிடமேனும் அவரிடமேனும் பிடிகொடாது தன் கட்சி எல்லைக்குள் வந்துவிட வேண்டும். அங்ஙனம் வரும்வரை பாடுவதை நிறுத்தக்கூடாது. அவனால் தொடப்பட்டவரெல்லாம் தொலைந்துவிடுவர். அவர் ஆட்டிற் கலவாது ஆட்டிற்கலவாது ஒரு புறமாய்ப் போயிருத்தல் வேண்டும். அதன் பின், தொடப்பட்ட கட்சியாருள் ஒருவன் இங்ஙனமே எதிர்க்கட்சி யெல்லைக்குட் புகுந்து ஆடிச்செல்லவேண்டும்.

ஒருவன் எதிர்க்கட்சி எல்லைக்குள் ஆடும்போது பாடுவதைத் தானே நிறுத்திவிட்டாலும், எதிர்க்கட்சியாரிடம் பிடிபட்டு அதை நிறுத்திவிட்டாலும், அவன் தொலைந்தவனாவன். தொலைதலைப் பட்டுப்போதல் என்பர். ஒரு கட்சியார் தம் எல்லைக்குள் ஆடும் எதிரியைத் தொட்டுப் பிடிக்க முயன்று முடியாமற்போயின், அவனைத் தொட்டவரெல்லாம் தொடப்பட்டராகவே கருதப் பட்டுத் தொலைந்துவிடுவர். ஒருவன் எதிர்க்கட்சியாருள் ஒருவனை யோ பலரையோ தொட்டுவிட்டு வரும்போது, தன் கட்சியெல்லைக் குட் கால்வைக்குமுன் பாடுவதை நிறுத்திவிடின் அவனால் தொடப்பட்டவர் பட்டுப்போகார்.

தனிப்பட்டவர்க்கு வெற்றியோ தோல்வியோ இல்லாமல் இருகட்சியாரும் சமமாகவுள்ளவரை, கட்சிக்கொருவனாக மாறிமாறிப் பாடிவரல் வேண்டும். ஒரு கட்சியார் ஒருவனை இழந்துவிடின் (அஃதாவது அவருள் ஒருவன் பட்டுப்போனால்) அவரே அடுத்த முறையும் பாடிச் செல்ல வேண்டும்.

ஒருசில ஆடகர் சடுகுடு என்று சொல்லாமல் பாட்டுப்போல் மோனை யெதுகை அமைந்த நெடுமொழித் தொடர்களையும் சொல்வதுண்டு. (ஒருவன் தன் வெற்றி வீரம் வலிமை முதலியவற்றை எதிரியிடம் மிகுத்துக் கூறுவது நெடுமொழியாம்.)

.

சடுகுடு' முதலிய தொடர்களை மூச்சுவிடாமற் சொல்ல வேண்டும் என்பது மரபு. ஆயினும் சிலர் மூச்சு விட்டுக்கொண்டே டைவிடாது பாடிக்கொள்வர். எந்தக் கட்சியில் அனைவரும் முன்பு படுகின்றனரோ, அந்தக் கட்சி தோற்றதாகும். தோற்றவர்க் குத் தோல்வியால் உண்டாகும் சிற்றவமானமேயன்றி வேறொரு தண்டனையுமில்லை.