உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

57

ஆட்டுத்தோற்ற விளக்கம் : பண்டைத் தமிழரசர் செய்துவந்த போர்வகைகளுள் வெட்சி என்பது ஒன்று. அது நிரை கவர்தல் அல்லது நிரை மீட்டல். இவற்றுட் பின்னது கரந்தை யெனப்படும்.

குறும்பரசர் கொள்ளைத்தலைவர் செயலாகவாவது, வேந்தர் ஏவலாலாவது நிகழ்வது நிரை கவர்தல். நிரை கவரப்பட்ட நாட்டரசன் தன் படைகளைக்கொண்டு நிரைமீட்டல் கரந்தை.

நிரை கவரும்போதும் நிரை மீட்கும்போதும் போர் நிகழும். அப் போரில் வெற்றி தருமாறு கொற்றவை என்னும் காளிக்குத் துடிகொட்டிப் பலியிடுதல் மரபு. இது கொற்றவை நிலை யெனப்படும். "மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே

என்பது தொல்காப்பியம்.

99

(புறத்.4)

சடுகுடு என்னும் விளையாட்டு, வெட்சிப்போரினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. இரு கட்சியாரும் வெட்சி மறவரும் கரந்தை மறவரும் போல்வர். இடைக்கோடு, அவ் விருசாரார் நாட்டிற்கும் இடைப்பட்ட எல்லைப்புறம் போன்றது. 'பலிசடுகுடு என்று பாடுவது, காளிக்குப் பலியிடுவதையும் துடி கொட்டுவதை யும் குறிப்பது (துடிப்பறையிற் சிறியவகை சடுகுடுக்கை அல்லது குடுகுடுப்பை என்று பெயர் பெற்றிருத்தல் காண்க.) இரு கட்சி யாரும் தத்தம் எதிர்க்கட்சியாரைப் பிடித்து நிறுத்துவது, நிரை கவர்தலையும் நிரை மீட்டலையும் நிகர்ப்பது. ‘பட்டுப் போதல்' என்னும் வழக்கு வெட்சிப்போரில் வீழ்ந்திறத்தலைக் குறிப்பது.

ஆட்டின் பெயர் : இந்த ஆட்டினால், நீண்ட நேரம் மூச்சடக் கவும், திருடனைப் பிடிக்கவும், எதிரியினின்று தப்பிக் கொள்ளவும், பயிற்சி பெறலாம்.

கொங்குநாட்டு வேறுபாடு : பாண்டிநாட்டார் சடுகுடு விற்கு இடைக்கோடொன்றே கீறிக்கொள்வர். கொங்கு நாட்டாரோ, இருகட்சியார்க்கும் இரு வேறு சதுரக் கட்டங்களை அமைத்துக்கொள்வர். ஆடும்போது ஒவ்வொருவரும் தத்தம் கட்டத்திற்குள்ளேயே நிற்றல் வேண்டும். வெளியேறின் விலகி விடல் வேண்டும்.