உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

5. கால் தூக்குகிற கணக்கப் பிள்ளை

ஆட்டின் பெயர் : ஒரு முதலாளியின் காலைத் தூக்கிய கணக்கப் பிள்ளைபோல், ஒருவன் இன்னொருவன் காலைத் தூக்கி ஆடும் ஆட்டு, கால் தூக்குகிற கணக்கப் பிள்ளையாம்.

ஆடுவார் தொகை : இதை ஆட நால்வர் வேண்டும்.

ஆடிடம்: இது பொட்டலிலும், தெருவிலும் ஆடப் பெறும்.

ஆடுமுறை

ஆடு முறை : ஒருவன் வலக்கையும் ஒருவன் இடக்கையுமாக இருவர் கைகோத்துக் குடங்கையாகக் கீழே தொங்கவிட்டு முன்னோக்கி நிற்க, மூன்றாமவன் அவ் விருவருள் இடவன் கழுத்தை இடக்கையாலும் வலவன் கழுத்தை வலக்கையாலும் அணைத்துக்கொண்டு, தன் வல முழங்காலை அவருடைய கோத்த குடங்கையில் வைத்தபின், அவனது இடமுழங்காலை நாலாமவன் நிலத்தில் ஊன்றாதவாறு இருகையாலும் தாங்கிப் பிடித்துக் கொள்வான். இந்த நிலையில் மூன்றாமவனைத் தூக்கிக்கொண்டு, முதலிருவரும் நாலாமவனும் அங்கு மிங்கும் இயங்கிக்கொண்டிருப் பர். அங்ஙனம் இயங்கும்போது, முதலிருவரும், “கால் தூக்குகிற கணக்கப் பிள்ளைக்கு மாதம் ஐந்து ரூபா, என்று மடக்கிக் மடக்கிச் சொல்லிக்கொண்டே செல்வர்.

66

99

ஆட்டுத் தோற்றம் : நோய்ப்பட்ட அல்லது நடக்க வியலாத முதலாளி யொருவர், வீட்டிற்குள் இடம் பெயர வேண்டிய விடத்தும், வெளியே சென்று வண்டியேறிய விடத்தும், அவரைக் கைத்தாங்கலாக இருவர் தாங்கிச் செல்ல, அவருடைய சல்ல, அவருடைய கணக்கப்பிள்ளை அவரது காலொன்றைத் தூக்கிச் சென்றதாகவும், அத்தொண்டு பற்றி அவருக்கு மாதம் ஐந்து ரூபா சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், தெரிகின்றது. இச் செய்தியை நடித்துக் காட்டுவதே இவ் விளையாட்டு. பண்டைக் காலத்தில் ஐந்து ரூபா நல்ல சம்பளம் என்றறிதல் வேண்டும்.