உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

59

6. பூக் குதிரை

ஆட்டின் பெயர் : ஒரு பூப் பெயரைச் சொல்லி, ஒருவன்மே லொருவன் குதிரையேறி விளையாடுவது பூக்குதிரை.

ஆடுவார் தொகை : பொதுவாக, ஐவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.

ஆடிடம்: முற்றத்திலும் தெருவிலும் பிற வெளியிடங்களிலும் இதை ஆடலாம்.

ஆடுமுறை : ஏதேனுமொரு தேர்ந்தெடுப்பு வகையில் தவறி விட்ட ஒருவன், அண்ணாவிபோல் நிற்கும் ஒருவனிடம் மறைவாக ஒரு பூப் பெயரைச் சொல்லிவிட்டுக் குனிந்து நிற்க வேண்டும். பிறர் ஒவ்வொருவனாய் அவன்மேற் குதிரையேறுமுன், ஒவ்வொரு பூப்பெயரை அண்ணாவியிடம் வெளிப்படையாய்ச் சொல்ல வேண்டும். யாரேனும் ஒருவன் சொல்ல, பூ குனிந்தவன் சொன்னதா யிருப்பின் பின்பு அவன் அண்ணாவியிடம் ஒரு பூப் பெயரை மறைவாகச் சொல்லிவிட்டுத் தான் குனிய வேண்டும். முன்பு குனிந்து நின்றவன், பின்பு பிறரொடு சேர்ந்து முன் சொன்னவாறு விளையாடுவான். குனிந்தவன் சொல்லாத வேறு பூப் பெயர் சொல்லிக் குதிரையேறினவன், ஒரு நிமையத்திற்குள் இறங்கிவிடல் வேண்டும். குனிந்தவன் சொன்ன பூ வரும்வரையும், ஒவ்வொருவனாகவும் மாறி மாறியும் ஏறியிறங்கிக் கொண்டே

யிருப்பர்.