உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

7. பச்சைக் குதிரை1

சிறுவர், குதிரைபோற்

குனிந்து

விளையாடும்

விளையாட்டுகளுள் ஒன்று பச்சைக் குதிரை. ஒரு சிறுவன் குனிந்து நிற்பது ஒரு சிறு குதிரைபோல் தோன்றுவதால், இது இப் பெயர் பெற்றிருக் கலாம். இதில் இருவகையுண்டு.

I. ஒருவகை

பலர் வரிசையாக இடையிட்டுக் குனிந்துகொண்டு நிற்பர். அவருள் ஒரு கோடியில் இருப்பவன், பிறரையெல்லாந் தாண்டித் தாண்டி மறுகோடியிற்போய்க் குனிந்து நிற்பான்.இங்ஙனமே பிறரும் வரிசைப்படி ஒவ்வொருவனாய்த் தாண்டித் தாண்டி மறுகோடியிற் போய் நிற்பர். இவ்வாறு ஆட்டுத் தொடரத் தொடர இடம் பெயர்ந்து கொண்டே யிருப்பர். இந்த ஆட்டு, பல சுவர்களைத் தொடர்ந்து தாண்டுதற்கேற்ற பயிற்சியாகும்.

II. மற்றொரு வகை

தேனுமொரு தேர்ந்தெடுப்பில் தவறிய சிறுவன் ஒரு காலை நீட்டி உட்கார்ந்திருப்பன். அவனது நீட்டிய காலைப் பிற சிறுவர் ஒவ்வொருவராய்த்தாண்டித்தாண்டிச் செல்வர். அடுத்த முறை அவன் கால்மேற் கால்வைத்து நீட்டியிருப்பான். அதையும் அவ்வாறே தாண்டுவர். அதற்கடுத்த முறை ஒரு கை அதன்மேல் வைத்திருப்பன். பின்பு, முறையே, உட்கார்ந்த நிலையில் தாழக் குனிந்தும், அந் நிலையில் சற்று நிமிர்ந்தும், எழுந்து நின்று தாழக் குனிந்தும், அந்நிலையில் சற்று நிமிர்ந்தும்,இவ்வாறு படிப்படியாக உயர்ந்துகொண்டிருப்பன். பிறரும்

னுடன் தாண்டிக் கொண்டே வருவர். எந்நிலையிலேனும் ஒருவன் தாண்டமுடியாது நின்றால், பின்பு அவன் கீழே உட்கார்ந்து முன்சொன்னவாறு படிப்படியாய் உயர்ந்துகொண்டிருக்க வேண்டும். முன்பு கீழேயிருந்தவன் பின்பு பிறரொடு சேர்ந்து விளையாடுவான். இங்ஙனம் ஆட்டுத் தொடரும். சிறுவர்க்கு இஃதொரு படிமுறை யுயரத் தாண்டற் பயிற்சியாம். ற்

1. பாய்ச்சல் குதிரை பச்சைக் குதிரையெனத் திரிந்தது - ப.ர்.