உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

61

8. குதிரைச் சில்லி

ஆட்டின் பெயர் : ஒருவன்மே லொருவன் குதிரையேறிச் சில்லியெறிந்தாடும் ஆட்டு குதிரைச் சில்லி.

ஆடுவார் தொகை : இதை ஆட இருவர் வேண்டும்.

ஆடிடம் : முற்றத்திலும், தெருவிலும் பிற வெளியிடங் களிலும் இது ஆடப்பெறும்.

ஆடுகருவி : ஆளுக்கொன்றாக இரு கற்கள் அல்லது ஓடுகளே இதற்குத் தேவை. அவை சில்லியெனப்படும்.

ஆடுமுறை : இருவர் ஒரு சிறு குழி கில்லி அதனின்று ஐந்தாறு கசத்தொலைவிற் கீறப்பட்ட உத்தியில் நின்று கொண்டு ஒவ்வொருவனாய்த் தன்தன் சில்லியை எறிவர். குழிக்குப் பக்கமாக எறிந்தவன் முந்தியாடுவான்.

முந்தியாடுகிறவன்

ன் னாருவன் முதுகின்மேல் ஏறிக்கொள்வான். சுமக்கிறவன் தன் சில்லியை முன்னால் சற்றுத் தொலைவிற்கு எறிவான். ஏறியிருப்பவன் அதைத் தன் சில்லியால் அடித்தல் வேண்டும். அடித்துவிடின், மேலிருந்துகொண்டே அடுத்த முறையும் அடிக்கலாம். அடியாவிடின், கீழே இறங்கிவிடல் வேண்டும். அதோடு ஓர் ஆட்டை முடியும். ஒவ்வோர் ஆட்டைக்கும் சில்லி எறிந்து, யார் முந்தியாடுவதென்று துணியப்படும்.

99

மேலே யிருக்கிறவன், தானே யடிக்காமல், தன்னைச் சுமந்துகொண்டிருக்கிறவனையும் அவன் எறிந்த சில்லியை அடிக்கச் சொல்லாம், அன்று "நீ அடிக்கின்றாயா? நானே அடிக்கட்டுமா? என்று கேட்பான். சுமக்கிறவன் “நீயே அடி என்றால், மேலிருக்கிறவன் அடிப்பான்; அன்றி, நான் அடிக்கிறேன்" என்றால், மேலிருக்கிறவன் சுமக்கிறவனிடம் தன் சில்லியைக் கொடுத்துவிடல் வேண்டும். சுமக்கிறவன் பின்பு

66