உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

65

பின்பு மீண்டுஞ் சிதறி ஒரு கல்லையெடுத்து மேலெறிந்து, கீழிருப்பவற்றுள் இரண்டை எடுத்துப் பிடித்தல் வேண்டும். அதன்பின், கையிலிருப்பவற்றுள் ஒன் ஒன்றை மேலெறிந்து, கீழிருக்கும் ஏனையிரண்டையும் எடுத்துக்கொண்டு பிடித்தல்வேண்டும். இங்ஙனம் ஐந்துமுறை சிதறிப் பிடிக்கும்போது, மூன்றாம் முறை ஒன்றும் மூன்றுமாகவும், நாலாம் முறை நாலையும் ஒருங்கேயும், ஐந்தாம் முறை மூன்றும் ஒன்றுமாகவும், கீழிருக்குங் காய்களை எடுத்தல்வேண்டும். இம் முறைகள் முறையே, ஒன்றாங்கொட்டை, இரண்டாங்கொட்டை, மூன்றாங்கொட்டை, நாலாங்கொட்டை, ஐந்தாங்கொட்டை என அவ்வவ் விறுதியிற் கூறப்படும்.

அதன்பின் நாலு கற்களைக் கைக்குள் வைத்துக்கொண்டு, ஒரு கல்லை இரு தடவை மேலே போட்டுப் பிடித்தல் வேண்டும். முதல்தடவை ஆட்காட்டி விரலால் நிலத்தில் இழுத்துக் “கோழி கொக்காம்” என்றும், இரண்டாம் தடவை குத்துக்கையால் நிலத்திற் குத்திக் “குத்துவிளக்காம்' என்றும், மேலெறிந்த கல்லைப் பிடிக்கு முன் சொல்லவேண்டும். பின்பும், அவ்வாறொரு கல்லை இரு தடவை மேலெறிந்து பிடித்தல்வேண்டும். முதல்தடவை பிடிக்குமுன் ஏனை நாலுகற்களையும் கீழே வைத்து “வைத்து எடுப்பாம்” என்றும், மறுதடவை பிடிக்குமுன் அந் நான்கையும் வாரிக்கொண்டு “வாரிக்கொண்டாம்” என்றும், சொல்லவேண்டும்.

பின்பு, இரு ரு கைகளையும் சேர்த்துக் கூட்டுக்கையாக வைத்துக்கொண்டு, ஐங்கல்லும் கீழே விழாதவாறு, "தப்பு தாளம் தலைவலி மோளம்" என்று நாற்சீர்படச் சொல்லிக் கொண்டு, வலக்கையைப் புறங்கையும் அகங்கையும் புறங்கையும் அகங்கையுமாக இருதடவை புரட்டி வைத்தல் வேண்டும். அதன் பின், ஐங்கல்லையும் மேலெறிந்து பிடித்து அவற்றுள் ஒன்றைச் சொக்கல் வேண்டும். சொக்குதலாவது சிலுப்புதல்.

பின்பு ஐங்கல்லையும் போட்டுப் புறங்கைமேல் தாங்கி, அவற்றுள் எதிரி பிடிக்கச்சொன்ன கல்லைப் பிறவற்றுடன் மேலெறிந்து பிடித்துக்காட்டல் வேண்டும். காட்டியபின் அதைத் தனியாய் எடுத்துவைத்துவிட்டு, ஏனை நான்கனுள் ஒன்றை மேலெறிந்து மூன்றைக் கீழே வைத்துவிட்டுப் பிடித்து, மீண்டும்

6

I. இத் தொடர் சேலத்தில் “கோழிப்பீயாம்” என்று வழங்குகின்றது.