உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

73

2. கிச்சுக் கிச்சுத் தம்பலம்

ஆட்டின் பெயர் : திரியை மண்ணுள் வைத்து மறைத்துக் 'கிச்சுக் கிச்சுத் தம்பலம்' என்று சொல்லியாடும் ஆட்டு, அச் சொல்லையே பெயராகக்கொண்டது. இது பாண்டி நாட்டில் ‘திரித்திரி து பாண்டிநாட்டில் பொம்முதிரி' என வழங்கும்.

ஆடுவார் தொகை : இரு சிறுமியர் இதை ஆடுவர்.

ஆடு கருவி : ஒரு முழ நீளமும் நால்விரல் உயரமுமுள்ள ஒரு சிறுமண் அல்லது மணற்கரையும், ஒருவிரல் அகலமும் இருவிரல் நீளமுமுள்ள ஒரு துணித்திரியும், இதை ஆடுகருவியாம். திரிக்குப் பதிலாகச் சிலவிடத்துக் குச்சையும் வைத்துக்கொள்வதுண்டு. பொதுவாக, பாண்டிநாட்டில் திரியும் சோழகொங்கு நாட்டில் குச்சும் வைத்துக் கொள்ளப்படும்.

ஆடிடம்: டம் : மண்ணும் மணலும் உள்ள இடமெல்லாம் இதை

ஆடுமிடமாம்.

ஆடுமுறை : ஒருத்தி, திரியைப் பற்றிக்கொண்டிருக்கும் தன் வலக்கைப் பெருவிரல் ஆட்காட்டிவிரல்களை மண்கரையின் வலப்பக்கத்திலும், வெறுமனே பொருத்தியிருக்கும் இடக்கைப் பெருவிரல் ஆட்காட்டி விரல்களை அதன் இடப்பக்கத்திலும், வைத்து உட்புகுத்தி அதன் ஒரு கோடியினின்று மறு கோடிவரை முன்னும் பின்னுமாகப் பலமுறை பலமுறை நகர்த்தி யியக்கி, திரியை மறைவாக ஒரிடத்தில் வைத்துவிட்டுப் பிறிதோரிடத்தில் வைத்ததாக நடித்துக்காட்டி, திரியுள்ள விடத்திற் கைவைக்கும்படி தன் எதிரியைக் கேட்பாள். எதிரி தன் இருகைகளையும் கோத்துத் தான் ஐயுற்றவிடத்திற் கரையின் குறுக்கே பொத்தி வைப்பாள். அவள் சரியான இடத்திலும் வைத்திருக்கலாம்; தவறான இடத்திலும் வைத்திருக்கலாம். சரியான இடத்தில் வைத்திருந்தால் பொத்தின வளும், தவறான இடத்தில் வைத்திருந்தால் திரியை வைத்தவளும், வன்றவராவர். ஒவ்வொரு வெற்றிக்கும் அடையாளமாக