உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

ஒவ்வொரு சிறுமண் குவியல் வைக்கப்படும். வென்றவளே அடுத்த முறை ஆடவேண்டும்.

சு

யாராயினும்,

திரியை மண்ணுக்குள் வைத்து மறைக்கும்போது, “கிச்சுக் கிச்சுத் தம்பலம் கீயாக் கீயாத் தம்பலம், மச்சு மச்சுத் தம்பலம் மாயா மாயாத் தம்பலம்” என்று பாடுவதுண்டு. பாண்டி நாட்டிற் கீழ்வரு மாறு பாடப்படும்:

“திரித்திரி பொம்முதிரி

திரி காலடி பொம்முதிரி

காசு கொண்டு பொம்முதிரி

கடையிலே கொண்டும் பொம்முதிரி

நாலு கரண்டி நல்லெண்ணெய்

நாற்பத் தொரு தீவட்டி

கள்ளன் வருகிறான் கதவையடை வெள்ளச்சி வருகிறாள் விளக்கேற்று வருகிறார் ஐயா சுப்பையா

வழிவி டம்மா மீனாட்சி.

""

இதில், 'வருகிறான்' 'வருகிறாள்' 'வருகிறார்' என்னுஞ் சொற்கள், முறையே, 'வாறான்', 'வாறாள்', ‘வாறார்' எனக் கொச்சை வடிவிற் பாடப்படும்.

பத்துமுறை முந்தி வென்றவள், எதிரியின் கூட்டுக்கை நிரம்ப மண்ணள்ளி வைத்து அதனுள் திரியை (அல்லது குச்சை) வைத்து மறைத்து, மண் நடுவில் எச்சைத் துப்பி அதில் ஒரு சிற்றெறும்பைப் பிடித்துப் போட்டு, எதிரியின் கண்பட்டைமயிர் அல்லது தலைமயிர் ஒன்றை அவளைப் பிடுங்கச்சொல்லி அதையும் அவ் வெச்சின்மேல் இட்டு, அவள் கண்ணை இறுகப்பொத்தி ஐம்பது கசத்தொலைவு மண்ணைக் கீழே கொட்டுவித்து, பின்பு புறப்பட்ட இடத்திற்குக் கொண்டுவந்து, கண்ணைப் பொத்தின கையை எடுத்துவிட்டு, மண் கொட்டின இடத்திற்குப் போய்த் திரியை (அல்லது குச்சை) எடுத்துக்கொண்டு வரச்சொல்வாள். எதிரி 6 எடுத்துக்கொண்டு வந்துவிட்டால் தண்டனையில்லை; இல்லாவிடின் அவள் தலையில் ஒரு குட்டுக்

காண்டு சென்று சன்