உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

75

குட்டப்படும். எதிரி மண் கொட்டிய இடத்தை எளிதாய்க் கண்டு பிடிக்க முடியாதபடி, அவளைக் கண்பொத்திக் கொண்டுபோம்போதும் கொண்டு வரும்போதும், நேராகச் சென்று நேராக வராமல் வளைந்து வளைந்து பல திசையில் போய்வருவது வழக்கம். வென்றவள் தோற்றவளைக் குட்டும்போது, பக்கத்திலிருக்கும் பிள்ளைகளும் ஆளுக்கொன்று குட்டுவது சிலவிடத்துண்டு.

ஆட்டுத் தோற்றம் : ஒருகால் இது கொள்ளைத் தொழிலி னின்று தோன்றியிருக்கலாம்.

ஆட்டின் பயன் : நினைவாற்றலும் திசையறியுந் திறனும் இதனால் வளர்க்கப் பெறலாம்.