உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

79

2. நிலாக் குப்பல்

ஆடுவாரெல்லாரும் 1ஆம் கட்சி 2ஆம் கட்சி என இருகட்சியாகப் பிரிந்து கொள்வர்.

சிறுசிறு மண்

பின்பு, இரு கட்சியாரும் வெவ்வேறு பக்கமாகச் சென்று, குறிப்பிட்ட எல்லைக்குள், மரநிழலும் தெருச்சந்தும் பொட்டலும் போன் ற பல இடங்களில் ஆளுக்கொன்றாகச் மண் குப்பல்களை வைத்துவிட்டு குப்பலுக்கு அடையாளமாக மேலே குச்சு நட்டுவைப்பதுமுண்டு. சில சமயங்களில் மண் குப்பலுக்குப் பதிலாகத் தென்னைமரம் வரைவர்.

வந்துவிடுவர்.

இரு கட்சியாரும் குப்பல் வைத்துவிட்டு வந்த பின், ஒவ்வொரு கட்சியாரும் ஒருங்கே சென்று, எதிர்க் கட்சியார் வைத்த குப்பல்களைக் கண்டுபிடித்து அழித்துவிடுவர். முதலாவது, ஒன்றாங் கட்சியார் இரண்டாங் கட்சியாரின் குப்பல்களைக் கண்டுபிடிப்பர். எல்லாக் குப்பல்களையும் கண்டுபிடிப்பது பெரும்பாலும் அரிதாகும். கண்டு பிடித்தவற்றை அழித்தபின், “வயிறு நிரம்பிவிட்டத I என்று

66

99

2ஆம் கட்சியார் கேட்பர். மேலுங் கண்டு பிடிக்க விருப்பமிருப்பின், "இன்னும் வயிறு நிரம்பவில்லை" என்றும், விருப்பமில்லாவிடின், “வயிறு நிரம்பிவிட்டது” என்றும், ஒன்றாங் கட்சியார் பதிலுரைப்பர். பின்பு, 2ஆம் கட்சியார் 1ஆம் கட்சியார் கண்டுபிடியாத குப்பல் களைக் காட்டி அவற்றை எண்ணிக்கொள்வர். இவ்வாறே 2ஆம் கட்சியார் 1ஆம் கட்சியாரின் குப்பல்களைக் கண்டுபிடிக்கும்போதும் நிகபம். இங்ஙனம் இரு கட்சியாரும் கண்டுபிடித்து முடிந்தபின், எக்கட்சியார் மிகுதியான குப்பல்களைக் கண்டு பிடித்திருக் கின்றனரோ, அக் கட்சியார் தம் கட்சியை அரசன் (ராஜா) என்று சொல்லிக் கொள்வர். இங்ஙனம் பலமுறை ஆடி, 50 அல்லது 100 எனக் குறித்த எண்ணிக்கையை முந்தியடைந்த கட்சியார் வென்றவராவர். தோற்ற கட்சியார் தோப்புக்கரணம் போடல் வேண்டும். குப்பலுக்குப் பதிலாகத் தென்னைமரம் வரையப்படின், அதன் ஒவ்வொரு கோட்டிற்கும் எண்ணிக்கையுண்டு.