உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

இந்தியா இந்தியார்க்குச் சொந்தமன்று

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

இந்தியா இந்தியரெல்லார்க்கும் பொதுவாம். ஆதலால், இந்தியார்மட்டும் அதை ஆளப்பார்ப்பது சீனப் படையெடுப்பினுங் கொடிதாம். ஆகவே, அரத்தஞ் சிந்தியும் அதை எதிர்த்தாகல் வேண்டும். இருபதாண்டிற்கு முற்பட்டதும், ஆரியச் சார்பினரே வகுத்ததும், எல்லாச் செய்திகளையுந் தீர எண்ணாததும், இந்திய வொற்றுமையைக் குலைக்கும் மொழித்துறை முடிபைக் கொண் டதுமான அரசிய லமைப்பையே இந்திவெறியார் தமக்குக் கேடகமாகக்கொள்ளின், அதைத் திருத்தியமைப்பதே உயர்திணை மக்கள் செயலாம். ஆங்கிலம் இந்தியப் பொதுமொழியன்றாயின், அதன் இடத்திற்கு வரத்தக்கது தமிழேயன்றி இந்தியன்று.

உலகப் பொதுவரசே ஒற்றுமைக்கு வழி

நாட்டுப்பற்றும்(Patriotism), நாட்டினப்பற்றும் (Nationalism) தன்னலத்திற்கும் பிரிவினைக்கும் போருக்குமே வழிகோலுவதாலும், 'ஒன்றிய நாட்டினங்கள் (UN) என்னும் உலகப் பொதுமன்றம் நிறைவின்றியும் வலிகுன்றியு மிருப்பதனாலும், அதிற் சேர்ந்துள்ள நாடுகளும் அதற்குக் கட்டுப்படாமல் விருப்பம்போற் போர் நிகழ்த்திக்கொண்டும் வெவ்வேறு ஒப்பந்தக் கூட்டுகளை அமைத்துக் கொண்டும் இருப்பதனாலும், உலகம் முழுதும் வரவர நெருங்கியும் ஒடுங்கியும் வருவதனாலும், ஒரு சிறு நாட்டின் நிலைமையும் உலக முழுவதையும் தாக்குவதனாலும், ஆட்சிமுறை பற்றி ஒரு பெரு நாட்டை விலக்கிவைப்பதால் உலகிற்கு நிலையான அமைதிக் குலைவே ஏற்படுவதனாலும், விளைபொருள்களையும் அகக்கரண வாற்றல்களையும் இறைவன் வெவ்வேறு நாடுகட்குப் பகுத்தளித் திருப்பதனாலும், மக்களின் உயர்திணைப் பண்பைப் போற்றிக் காத்து அதனாற் பெறத்தக்க பேறுகளை யெல்லாம் பெறுதற் பொருட்டு, தமிழர் தம் முன்னோரின் பண்பாட்டுக் கொள்கைக் கேற்ப உலகப் பொதுவரசை (World Government) நிறுவ வழி வகுப்பதே தக்கதாம். அதன் வாயிலாகவே நிலையான ஒற்றுமையும் அன்பும் அமைதியும் இன்பமும் வளர்ந்தோங்கி மண்ணுலகமும் விண்ணுலகமாம் அதற்குத் துணையாவது ஆங்கிலமே.

முதுமொழி யொருதனி முத்தமிழ் முகிழ்த்தன புதுமொழி பலவுளும் பொலியும் ஆங்கிலம் பொதுமொழி யுலகெலாம் புகலும் அறிவியல் செதுமொழி யிந்தியாற் செறிவதடிமையே.