உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

87

இனி, இந்திச் சொல்விலக்கில் தி.மு.க.அரசு விடாப்பிடியா யிருப்பின், நடுவணரசு ஏதேனும் இடர்ப்பாடும் உண்டாக்கலாம். அதனால் தமிழ்நாட்டுப் பிரிவினை யுணர்ச்சிதான் வலுக்கும்.

இப் படைமாணிப் பயிற்சி ஆங்கிலத்திலேயே தொடங் ப் கினமையாலும், இன்றும் பெரும்பால் ஏவற்சொற்கள் ஆங்கில மாகவே யிருப்பதனாலும், இந்திய வொற்றுமைக்கு ஆங்கிலமே ஏற்றதாதலாலும், இந்தி வெறுப்புத் தமிழ்நாட்டில் வரவர வளர்ந்து வருவதனாலும், தமிழ்நாடு பலவகையில் தனிப்பட்டதாதலாலும், படைப்பயிற்சிச் சொற்களெல்லாவற்றையும் இந்தியாவெங்கும் ஆங்கிலத்தில் ஆள்வதே அறிவுடைமையாகும். ஆங்கிலம் இந்தியப் பொதுவாயில்லாவிடின், தமிழ்நாடுமட்டும் என்றும் இந்தித் தொடர்பு அற்றதாகவே யிருக்கும்.

தென்னாட்டிற் கல்வி வளர வளர ஆங்கில விருப்பும் இந்தி வெறுப்பும் வளர்ந்துகொண்டே வரும். ஆதலால், ஆங்கிலத்தை ஒரே இந்திய ஆட்சிமொழியாக்காவிடின், அண்மையிலோ சேய்மை யிலோ எதிர்காலத்தில் இந்தியா இருதுண்டாவது ஒருதலை. இதற்கு இந்தி வெறியரும் பேராயத் தலைவருமே பொறுப்பாளியராவர். இவ்விரு சாராரும் தாங்களே இந்திய ஒற்றுமையைக் குலைத்துக் கொண்டு தங்கள் கொள்கையை ஏற்காத பிறர்மேல் அக் குற்றத்தை ஏற்றிக்கூறுவது, தங்கள் குற்றத்தை இருமடியாகப் பெருக்குவதே யாகும். தாக்குவான் தாக்குண்டவனின் தற்காப்பைத் தாக்காகக் காட்டுவது கடைப்பட்ட கயமைத்தனமாகும்.

தமிழன் உயிர்நாடி தமிழ்

தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர், “நாங்கள் நூற்றுக் கணக்கான பள்ளிகளை நிறுவினோம்; பல கல்லூரிகளைத் தோற்றுவித்தோம்; பள்ளியிறுதிவரை படிப்பை இலவசமாக்கி னோம்; பல்கலைக்கழக முன்னை வகுப்பையும் (P. U. C. ) இலவச மாக்க இருந்தோம்; பள்ளிகளில் ஏழை மாணவர்க்குப் பேருதவியான நண்பகல் உணவுத் திட்டத்தைப் புகுத்தினோம்; பல அணைகள் கட்டினோம்; பல டங்களில் நீர்ப்பாசன ஏந்துகள் (வசதிகள்) ஏற்படுத்தினோம்; பல தாழிற்சாலைகள் அமைத்தோம்; நிலவரிக் குறைப்புத் தீர்மானம் நிறைவேற்றினோம்; பயிர்த்தொழிற்கு மின்னாற்றலை நிரம்ப வழங்கினோம்; எங்கள் ஆட்சிக்காலமெல் லாம் உணவுப் பெருக்கமும் தொழில் வளர்ச்சியும் பொருள் நிலைக்கள (ஆதார) முன்னேற்றமும் தாடர்ந்து வந்தன. என்று குன்றேறி நின்று பறைசாற்றலாம். ஆயின், இந்திக் கல்வியால் தமிழ வாழ்விற்கு நஞ்சூட்டப்பட்டதை அவர் கொஞ்சமும் உணர் வதில்லை. இந்தியாலேயே சென்ற பொதுத் தேர்தலில் தலைகீழாய் விழுந்தும் இன்னும் அதையே போற்று வதனால், அடுத்த தேர்தலில் தமக்கு வரக்கூடிய வெற்றியையும் தாமே உதைத்துத் தள்ளுகின்றனர்.