உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

யிருப்பதால் அவ் விந்திச் சொற்களை முன்போல் வழங்கலாமென் றும், அவற்றிற் பயிற்சிபெற்ற ஆசிரியர் அவற்றிற்கீடாக ஆங்கிலச் சொற்களை இனி ஆள்வது அரிதென்றும், ஆகவே மறுசூழ்வு செய்து பழையபடி படைமாணிப் பயிற்சியை நடத்துவதே தக்க தென்றும், நடுவணரசினர் தமிழ்நாட்டரசைக் கேட்டிருக்கின்றனர். இதிற் பலவகை இடர்ப்பாடுகள் நேர்கின்றன.

(1) தேசியப் படைமாணிப் பயிற்சி சிலர்க்கு வேலைவாய்ப் பளிப்பதால் அதனைப் பெறுவது நன்றே. மக்கள் பெருகப்பெருக வேலை வாய்ப்பும் பெருகல் வேண்டும். (2) இந்தியாவின் மற்றப் பகுதிகளிலெல்லாம் மாணவர்க்கு அவ் வாய்ப்பு இருக்கும்போது, அதைத் தமிழ்நாட்டு மாணவர்க்கு மட்டும் மறுப்பது நன்றன்று. ஆயின்,அது தமிழ மாணவரின் தன்மானத்திற்கு இழுக்காயிருத்தல் கூட ாது.

(3) அயன்மொழியாரும் தாய்மொழிப் பற்றில்லாத வருமான தமிழ்நாட்டு மாணவர் சிலர் அப் பயிற்சியை இந்திச் சொற்களொடும் விரும்பலாம். ஆயின், நாட்டு மொழியும் பண்பாடும் கெடாதவாறு அயலாரும் பற்றில்லாரும் பெரும்பாலாருடன் ஒத்தேபோதல் வேண்டும்.

(4) பத்துப் பதினைந்தே இந்திச் சொற்களிருப்பதால், அவற்றை இந்தியா முழுதும் எளிதாய் நீக்கிவிடலாம். அவற்றிற் பயிற்சி பெற்ற ஆசிரியர் அவற்றிற்கீடாக ஆங்கிலச் சொற்களை ஆள்வது அரிதென்பது பொருந்தாது.எங்ஙனமும் இந்தியைத் திணித்துவிட வேண்டுமென்னும் ஒட்டாரத்தையே இக் கூற்றுக் காட்டுகின்றது.

(5)

பத்துப் பதினைந்து இந்திச் சொற்களைத் தொடர விட்டால், நாளடைவில் எல்லாச் சொற்களும் இந்திச் சொற்களாக மாறிவிடலாம்.

(6) இந்திச் சொற்களை ஆள்வதால், உறைத்த தமிழ்ப் பற்றுள்ள மாணவர் அப் பயிற்சியிற் சேரத் தடையாக லாம். (7) தி.மு.க. அரசு கல்வித்துறையில் நடுவணரசிற்கு மாறாக

இந்தி நீங்கிய இருமொழித் திட்டத்தை மேற்கொண் டிருப்பதால், தேசியப் படைமாணியர் பயிற்சியில் ஒருகால் விட்டுக்கொடுப்பினுங் கொடுக்கலாம். இதனால் தி.மு.க. வின் இந்தி விலக்குக் கொள்கை தளர்ந்ததாகக் கருதப்படும்.