உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

85

வாய்ப்பையும் பொறுத்தது. நூற்றிற் கெண்பதின்மர் தற்குறிகளாக விருக்கும் நாட்டில் எவரும் கட்சித் தலைவராகலாம், பேச்சாற்றல் வாய்ந்தவராயின்.

உலகில் தன்னலமே மிக்கிருப்பதால், ஒருவரது விருப்பம் நிறைவேறாவிடின் அதற்குத் தடையாயுள்ளவரைக் கடிந்து கொள்ளத் தான் செய்வர். ஒரு பொருளை விற்பவர் அதைப் பலர் வாங்காவிடின் அவரை வெறுப்பது இயல்பே. அங்ஙனமே ஒரு கட்சித் தலைவரும் தம் கருத்தைப் பிறர் ஏற்காமையால் தம் தலைமையை இழக்க நேரின், ஏற்காதவர்மேற் குறைகூறுவதும் இயல்பே.

உலகில் முதன்முதல் நாகரிகப் பண்பாட்டைக் கண்டவரும் அதை உலகெங்கும் பரப்பினவரும் தமிழரே. ஆதலாற் பண்பாட்டுக் குணங்களுள் ஒன்றாகிய ஒற்றுமையை அவர் வேண்டாதவரல்லர்.

ஒற்றுமை நன்றே. ஆயின், ஒற்றுமை கையாளப்பெறும் மக்கட்பரப்பளவு அது வேண்டப்பெறும் வினையை அல்லது செய்தியைப் பொறுத்தது. ஒரு சிறு குடும்பத்தில் எல்லாரும் எல்லாவற்றிலும் ஒற்றுமையாயிருக்கலாம். ஆயின், ஒரு பரந்த உட்கண்டத்தில், போக்குவரத்தும் தற்காப்பும் போன்ற பெருஞ் செய்திகளில்தான் ஒற்றுமை யிருக்க முடியும். அதற்கு மேற்படின் "பேராசை பேரிழப்பு” என்றாகிவிடும்.

இந்தியப் பொதுவான காசுகளிலும் காசுத் தாள்களிலும் ஏமவைப்பக ஆள்நரின் (Reserve Bank Governor) கையெழுத்தும் வாய்நேர்வும் (Promise) ஆங்கிலத்தில்தான் இருத்தல் வேண்டும். இந்தியிலுமிருப்பின் தமிழிலும் இருத்தல் வேண்டும். அல்லாக்கால் மீண்டும் இந்தியெதிர்ப்புத் தமிழ்நாட்டிற் பொங்கியெழும்.

தன்மானத்திற்கும் பகுத்தறிவிற்கும் ஒவ்வாத அடிமைச் செயலும் பயனில் முயற்சியுமான செய்திகளில், சிற்றளவான பண்பட்ட மக்கட் பரப்பிலும் ஒற்றுமையமையாது.

ஒரு கூட்டு வாழ்க்கையில் ஒரு சாராரின் மீச்செலவை (வரம்பு கடந்த நடத்தையை) மற்றொரு சாரார் ஒரு குறிப்பிட்ட கால எல்லைவரை பொறுத்திருந்தாராயின், அப் பொறையை அவர் நெடுகலுங் கையாள வேண்டுமென்னும் யாப்புறவில்லை. தமிழர் ருபோதும் இந்தியை இந்தியப் பொதுமொழியாக ஏற்றுக்கொள்ள வில்லை. இந்திச் சார்பினர் மட்டும் வகுத்த மொழித்திட்டம் தமிழரைக் கட்டுப்படுத்தாது.

தமிழ்நாட்டு மாணவருள் மாபெரும்பாலார் தேசியப் படை மாணிப் (NCC) பயிற்சியில் இந்தியேவற் சொற்களை வேண்டா மையால், அப் பயிற்சி நிறுத்திவைக்கப்பட்டது. ஆயின் அச்சொற்கள் பத்துப் பதினைந்துதான் என்றும், ஏனையவெல்லாம் ஆங்கிலமா