உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?

சொற்கடன், பொருட்கடன் எனக் கடன் இரு வகைத்து. இவற்றுள் முன்னது திருப்பித்தரும் இயல்பில்லது. கடன்காரன், கடனாளி ஆகிய இருசாராரிடத்தும் ஒரே சமையத்து இருக்கக் கூடியது; திருப்பும்வரை கடனாளி யிடத்தேயே யிருப்பது.

பொருட்கடன் படுதல் ஒரு சாராருக்கு நன்மையும் ஒரு சாராருக்குத் தீமையும் விளைக்கும். கடன்கொண்டு ஓர் இன்றி யமையாத கருமத்தைச் செய்யவேண்டியவராயும்.குறித்த காலத்துத் திருப்பித்தரும் ஆற்றல் உடையவராயும். இருப்பார்க்கு அது நன்மையும், தேவையில்லார்க்கும் திருப்பித்தரும் ஆற்ற லில்லார்க்கும் அது தீமையும் விளைக்கும்.

ஒரு வணிகன் தன் வணிக முதலீட்டிற்கும், ஒரு தொழிலாளி தன் தொழிற்கருவி வாங்குவதற்கும், ஒரு மனைக்கிழவன் தன் மனையறத்தை நடத்துதற்கும் கடன் வாங்கலாம். திருப்பித்தரும் நிலையில் அது கொள்ளத்தக்கதே. அரசரும் அரசியலாரும் அமைதிக் காலத்தில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றச் செல்வரிடமும் பிற நாட்டிடமம் போர்க்காலத்தில் போரை நடாத்த ஏழைகள் உட்பட எல்லாரிடமும், கடன் கொள்கின்றனர். இது மதிப்பும் தகுதியும் வாய்ந்ததே. “கடன் கொண்டும் செய்வன செய்” என்னும் பழமொழி இத்தகைய கடன்பற்றியதே.

கடனாளி

ஆயின் தேவையில்லாதார் கடன் கொள்ளின் கட என்னும் பழிப்பும் வீண் வட்டிச் செலவும் உள்பொருட் கேடுமே நேரும். இனி, திருப்பித்தரும் ஆற்றலில்லார் கடன்படினோ அவர் பாட்டைச் சொல்லவே வேண்டுவதில்லை.

கடன் பட்டையோ கடை கெட்டையே'

கடனில்லாச் சோறு கால்வயிறு போதும்'

என்னும் பழமொழிகளும்.

"விடங்கொண்ட மீனைப் போலும்

வெந்தழல் மெழுகு போலும்

படங்கொண்ட பாந்தள் வாயிற்

பற்றிய தேரை போலும்