உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




X

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

முகவுரை

"வடக்கத்தியானையும் வயிற்றுவலியையும் நம்பக் கூடாது” என்பது பழங்காலப் பழமொழிகளுள் ஒன்று. இது எக்காலத்து எவ்விடத்து எதுபற்றி எவ்வாறு எவர் வாயிலாய்த் தோன்றிற் றென்பது தெரிந்திலது. இதை ஒருமருங்கு ஒத்ததே,

  • Cold weather and knaves come out of the north.” என்னும் ஆங்கிலப் பழமொழியும். வடக்கத்தியான் என்றது யாரை என்பது தெரிய வில்லை.

ஆங்கிலர் நீங்கியபின். இந்தியரெல்லாரும் கண்ணிய மான விடுதலை யின்பவாழ்வு வாழ எண்ணியிருந்த காலத்து, இந்தி வெறியர் ஏனைமொழியாரை முன்னினும் பன்மடங்கு இழிவான அடிமைத்தனத்துள் அமிழ்த்தவும் தமிழை நாளடைவில் மெல்ல மெல்ல அழிக்கவும் திட்டமிட்டு விட்டனர். இது முதலாவது தாக்கியதும் முதன்மையாகத் தாக்குவதும் உலகமுதல் உயர்தனிச் செம்மொழி பேசும் தமிழரையே.

கடந்த முப்பான் ஆண்டுகளாகத் தமிழர் எத்தனையோ வகையில் எதிர்த்துப் போராடியும். மறைமலையடிகள் உள்ளிட்ட மாபெரும் புலவர் ஏரணமுறையில் எடுத்துரைத்தும். பாலறா வாய்ப் பசுங்குழவிகளை யேந்திய தாய்மார் பலர் சிறை சென்றும், தமிழை உயிர்போற் கருதிய இளைஞரும் நடுமையரும் தமிழ் கெடுமென் றஞ்சி அளவிறந்து உளம்நொந்து உலகை வெறுத்துத் தீக்குளித்தும், முதுகந்தண்டொடிய மாணவர் தடியடியுண்டும், இந்திவெறியர் இம்மியும் அசையாது கடுமுரண்டுடன் அஃறிணையும் நாணுமாறு அடர்த்து நிற்கின்றனர். இதற்குத் தூண்டுகோலானவர் தமிழைக்காட்டிக் கொடுக்கும் தமிழ்நாட்டுப் பேராயக்கட்சித் தலைவரே.