உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




I.

1. முற்படை

ஒரு காலத்தில் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஆத்திரேலி யாவும் ஒரே பெருநிலமாய் இணைந்திருந்தன. அன்று, ஐரோப் பாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலுள்ள நண்ணிலக் கடலின் தொடர்ச்சி ஆசியாவை ஊடறுத்துச் சென்று, அமைதி வாரியிற் (Pa- cific ocean) கலந்தது. இன்று ஞால (பூமி) முகடாயிருக்கும் பனிமலைத் தொடர் (இமயம் ) அன்று கடலுள் ஆழ மூழ்கியிருந்தது.

குமரிமுனைக்குத் தெற்கில் இன்று இந்திய வாரி இருக்க மிடத்தில், இந்தியாவோடிணைந்து ஒரு நிலப்பரப்பு ஏறத்தாழ ஈராயிரங் கல் தொலைவு தொடர்ந்திருந்தது. அதுவே தமிழன் பிறந்தகமும் பழம்பாண்டி நாடுமாகிய குமரிக்கண்டம். அதன் தென்கோடியடுத்து, குமரியென்னும் பெருமலைத் தொடரும் அத் தொடரினின்று பாய்ந்தோடிய பஃறுளி யென்னும் பேராறும் இருந்தன. அவ் வாற்றங் கரைமேலிருந்த மதுரை மாநகர்தான், பாண்டியரின் முதல் தலைநகரும் தலைக்கழக இருக்கையுமாகும். அம் மதுரை கண்ணபிரான் பிறந்து வளர்ந்த வடமதுரை நோக்கித் தென்மதுரை எனப்பட்டது.

தென்மதுரையினின்று ஏறத்தாழ ஈராயிரங்கல் தொலைவு வடக்கிலிருந்த திருப்பதி யென்னும் வேங்கடமலைவரை, தமிழ் பெரும்பாலும் திரியாது வழங்கிற்று. அதற்கப்பால் வடுகு என்னும் தெலுங்காகத் திரியத் தொடங்கிற்று. அதனால், வேங்கடத்திற்கு வடக்கிலுள்ள நாட்டை அல்லது நாடுகளை 'மொழிபெயர் தேயம்’ என்றனர்.

"பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும்

99

'குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்

மொழிபெயர் தேஎத்த ராயினும்'

99

(அகம் . 211 : 7-8)

(குறுந். 11:5-7)

ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே வடதமிழ் வடுகாகத் திரியத் தொடங்கிவிட்டதென்பது, அதன் பெயராலேயே விளங்கும்.