உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

வடம் = வடக்கு. வடம் - வடகு - வடுகு = வடதிசை மொழி.

ஆந்திரன் என்னுஞ் சொல்லிற்கு வயவன் (வீரன்) என்று பொருளுரைப்பர். அஃதுண்மையாயின் அதுவும் தமிழ்ச் சொல்லின் திரிபே. ஆண்திறம் - ஆண்திறன் - ஆண்டிறன் - ஆந்திரன். ஒ. நோ: நான்முகம் - நான்முகன் = நான்முகத்தான். ஆண்டிறன் - அண்டிறன் அண்டிரன் - அந்திரன். ஆந்திரன் மொழி ஆந்திரம்.

இடைக்காலத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டிரம், கூர்ச்சரம் (குசராத்தி) ஆகிய ஐந்தும், ஆரியராலேயே பஞ்ச திராவிடம் எனப்பட்டன. ஆகவே, விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள மொழிகளெல்லாம் ஒருகாலத்தில் திரவிடமாகக் கொள்ளப்

பெற்றமை தெளிவாம்

7-8ஆம் நூற்றாண்டிலிருந்த குமாரிலபட்டர் தமிழும் திரவிடமுஞ் சேர்ந்த தென்மொழியை ஆந்திர - திராவிட பாசை எனக் குறித்தார். இதனால், கன்னடம் தெலுங்குள் அடக்கப் பட்டமை புலனாம்.

வேதக்காலத்தை யடுத்துச் சமற்கிருதம் உருவாக்கப் பெற்ற போது, இந்திய வட்டார மொழிகளெல்லாம், வடஇந்தியாவில் (மேற்கிலிருந்து கிழக்காய்ப்) பைசாசி, சூரசேனி, மாகதி என்றும், நடுவிந்தியாவில் மராட்டிரி என்றும், தென்னிந்தியாவில் திராவிடி என்றும், ஐந்து பிராகிருத மொழிகள் கணக்கிடப்பெற்றன. திராவிடி என்றது தமிழை. இதனால். திரவிடமொழிகளெல்லாம் அக்காலத் தில் தமிழுக்குள் அடக்கப் பெற்றமை அறியப்படும்.

பிராகிருதம் என்பவை சமற்கிருதத்திற்கு முன்னிருந்தவை அல்லது இயல்பாக முந்தித் தோன்றியவை. பிரா = முன். கிருத = செய்யப்பெற்றது. சமற்கிருதம் என்பது, வழக்கற்றுப்போன வேத ஆரியரின் முன்னோர் மொழியும் ஐம்பிராகிருதங்களும் கலந்தது. சம் (ஸம்) = உடன், ஒருங்கு, ஒன்றாக. கிருத (க்ருத) = செய்யப் பெற்றது. ஸம்க்ரு என்னும் அடை பெற்ற அல்லது கூட்டு முதனிலை ஸகரமெய் இடையிடப் பெற்று ஸம்ஸ்க்ரு என்றாயிற்று. க்ரு = செய், ஸம்ஸ்க்ரு ஒருங்குசேர், ஒன்றாகச் செய், இசை (to put together, join together, compose) - இ.வே.

=

இதனால், பிராகிருதம், சமற்கிருதம் என்பன உறவியற் சொற்கள் (Relative Terms)என்பதும். பிராகிருத மொழிகள் சமற்கிருதத்திற்கு முந்தியவை என்பதும் பெறப்படும். ஆயினும், மேலையர் இன்றும் வடவரைக் குருட்டுத்தனமாய் நம்பி, மகன் தந்தையையும் பேரன் தந்தை வாயிலாய்ப் பாட்டனையும் பெற்றனர் என்னும் முறையில், சமற்கிருதத்தினின்று பிராகிருதமும் பிரா கிருதத்தினின்று திரவிடமும் (தென்மொழியும்) வந்தன வென்று