உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முற்படை

கொண்டிருக்கின்றனர். இதற்குச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியும் இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரின் தமிழ்ப்பற்றின்மையும் காட்டிக்கொடுப்பும் பெரிதுங் கரணியமாம்.

நடு இந்திய மொழிகளாகிய மராட்டியும் குசராத்தியும் பஞ்ச திரவிடக் கூறுகளாகக் கொள்ளப்பட்டிருந்தமையாலும், வடஇந்திய மொழியாகிய இந்தியின் அடிப்படை இன்றுந் தமிழா யிருப்பதனாலும், மேலையாரிய மொழிகளிலும் தமிழ் சிறிதும் பெரிதும் கலந்திருப்பதனாலும், வடஇந்தியப் பிராகிருதங்களும் மூவகைத் திரவிடங்களுள்' ஒன்றான வடதிரவிடத்தின் திரிபு வளர்ச்சியா யிருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு.

சமற்கிருதத்தில்

ஐம்பிராகிருதமுங் கலந்திருப்பினும், நேர்வழியாகவும் அல்வழியாகவும் ஐந்தில் இரு பகுதி யென்னுமளவு மிகுதியாகக் கலந்திருப்பது தமிழே என்பதை அறிதல் லேண்டும்.

3

1. தென்திரவிடம் (தெலுங்கு கன்னட ம்

ம் முதலியன), நடுத்திரவிடம் (மராட்டியும் குசராத்தியும்), வட திரவிடம் என்பன மூவகைத் திரவிடமாம். என் ‘தமிழ் வரலாறு' என்னும் நூலைப் பார்க்க.