உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

5. அயற்சொற் சேர்ப்பு

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

தமிழின் சொல்வளத்தையும் தூய்மையையும்பற்றிப் பொறாமைகொண்ட பிராமணத் தமிழ்ப் பண்டிதர், அயலார் பார்வையில் தமிழைப் பன்மொழிக் கலவையாகவும் புன்சிறு கிளைமொழியாகவுங் காட்டல்வேண்டி, ஏற்கெனவே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியில், எட்டுணையும் வேண்டாத ஆயிரக்கணக்கான அயன்மொழிச் சொற்களைத் தமிழில் வந்து வழங்குவனபோற் சேர்த்துள்ளனர்.

எ-டு:

அரபிச்சொற்கள்

தன்னெழுத்துச் வேற்றெழுத்துச் தன்னெழுத்துச் வேற்றெழுத்துச்

சொல்

சால்

சால்

சொல்

சுமு

இஜ்ஜத்து

இத்திபாரா

இஸ்தவா

இத்தத்து

இஜாபா

இந்துவி

இஸ்திக்பார்

இத்தா

இஜார்நாமா

இப்பா

இஸ்திமிரார்

இத்திகாத்து

இஜாஸத்து

இபாதத்து

இஸ்தியார்

இத்திகாபு

ஷாரா

இபாரத்து

இஸ்திலாக்கு

இத்திபார்

இஷுக்கு

இபுதார்

ஸ்ஸா

இத்திராசு

இஷுராக்கு இபுனு

இஸூராபு

இத்திலா

இஸ்கால்

இந்தி சொல்லளவிற் சமற்கிருதத்தொடும் மொழியளவில் உருதுவொடும் தொடர்புடைமையால், சமற்கிருதம் பாரசீகம் அரபி, துருக்கி ஆகிய ஆரிய சேமிய சித்திய மொழிகளினின்று பல சாற்களைக் கடன்கொள்ளலாம். அவை தமிழிலும் புகுத்தப் பெறலாம்.

அச்சா, சபாசு, பலே, பேஷ் முதலிய பல சொற்கள் ஏற்கெனவே சென்னைப் ப.க.க. தமிழகரமுதலியிற் சேர்க்கப்பட்டுள. இவை ஒருகால் கொச்சை வழக்கிற் புகுந்துள்ளன என்று கொள்ளினும், டர்(அச்சம்), லக்கிடி (விறகு) முதலிய இந்திச் சொற்கள் அவ் வகர முதலியிற் சேர்க்கப்பட என்ன முறையுண்டு? தமிழருள் யாரேனும் இச் சொற்களை ஆள்கின்றனரா? இவற்றைச் சேர்க்கும்போது, அகர முதலித் தொகுப்புக் குழுவினர் மறைமலையடிகள் போன்றார் கருத்தைக் கேட்டதுமில்லை; இவற்றைச் சேர்க்கலாமா என்று ஒரு சிறிதும் எண்ணிப் பார்த்ததுமில்லை. அதிகாரம் தம் கையிலிருந்த தினால், தமிழைக் கெடுப்பதற்கு இயன்றதெல்லாம் செய்ய வேண்டு மென்பதையே குறிக்கோளாகக் கொண்டதாகத் தெரிகின்றது.