உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தியால் விளையுங் கேடு

வருகிறது,

வருகின்றன

வருவா -ன் -ள்-

வரும்

வர்க் (நிகழ்காலம்)

வாவ், வம்,வர்ம் (எதிர்காலம்)

23

இங்ஙனம் எல்லாத் தமிழ்ச்சொற்களும் நாளடைவிற் குட்டம் பட்டு உருக்குலைந்து போவதுடன், அளவிறந்த அயற்சொற்களால் வழக்கும் வீழ்த்தப்பட்டு. தமில் (தமிழ்) என்ற பெயரும் மறைந்து தக்ஷிணபாஷா(தக்ஷிண்பாஷ்) என்றொரு புதுப்பெயரும் கொடுக்கப் படும் என அறிக.

சந்தமிழ்ப் புலவரிருந்து போற்றாமையால், பழஞ்சேர நாட்டுத் தமிழின் திரிபாகிய மலையாளத்தில், முக்கால ஐம்பால் வினைமுற்றுகளும் வன்னு, வருன்னு, வரும் எனப் பாலீறற்ற வடிவங்களாகவே வழங்கி வருதலையும் நோக்குக.

4. ஒலிமாற்றம்

வடசொற் கலப்பினால் பல தென்சொற்களின் படுப்பொலி யெழுத்துகள் எடுப்பொலி யெழுத்துகளாக மாறியுள்ளன.

எ-டு: செவ்வந்தி

=

செவ்வந்தி வேளையிற் பூக்கும் மஞ்சட்

பூவும் வெண்பூவுமான பூவகைகள்.

செவ்வந்தி - சேவந்தி (க.) - சேமந்தி (தெ) - சாமந்தி - ஜாமந்தி.

ஒரு புலவர் சாமந்தி என்னுங் கொச்சை வடிவையே, தெரியாமலோ வேடிக்கைக்காகவோ, சரியான வடிவாகக்கொண்டு செத்த குரங்கு என்று பொருட்படுத்தி அப் பூவை யணிந்த ஒரு பெண்ணைப்பற்றிப் பின்வருமாறு ஒரு பாட்டும் பாடிவிட்டார்.

"கைத்தலந் தன்னினிற் செம்பொன் வளையல் கலகலெனச் சத்தமொ லித்திட நூபுரப் பாதச் சதங்கைகொஞ்சத் தத்திமி யென்றே நடஞ்செய்சம் பீசர்தஞ் சன்னிதிப்பெண் செத்த குரங்கைத் தலைமேற் சுமந்து திரிந்தனளே

இதனினுங் கேடான செய்தி, செவ்வந்தி யென்பதன் திரிபான சேவதீ என்னும் வடசொல்லே தென்சொற்கு மூலமெனச் சென்னைப் ப. க. க. தமிழகர முதலியிற் காட்டப்பட்டிருப்பதாகும்.

மறைமலையடிகள் காலத்திலிருந்து தமிழ் மறுமலர்ச்சி பரவிவரினும் புலவரல்லா மக்கள் இன்னும் குமரிநாட்டு நிலைக்கு வராதிருப்பதால், இந்தி பொதுமொழியாக்கப்படின் எத்துணையோ தென்சொற்கள் ஜாமந்தி நிலையடையும் என அறிந்துகொள்க.