உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திப் போராட்டம்

39

தமிழ்நாட்டிற்கு இந்தி கூடாது என்பதே தமிழறிஞர் கொள்கை. இந்தி பிந்திவரினும் இன்றே வரினும் தமிழ்நாட்டிற்கு ஒன்றே. ஆரியங் கலந்த திரவிடமொழிகள் தென்மொழியின் செத்த கூறுகள். தமிழ் ஒன்றே உயிருள்ளது. ஆதலால், இந்தி வந்தால் திரவிடத்திற்குக் கேடில்லை; தமிழுக்கோ இறப்புண்டாம். இதை யறியாத திரவிடர் இந்தியை எதிர்க்கும் தமிழரைக் கண்டிப்பது அறியாமையொடுகூடிய அடிமைத் தனமே.

(ii) இரண்டாம் போராட்டம்

1965ஆம் ஆண்டு சுறவம் 13ஆம் பக்கல்(26,சனவரி) மக்க ளாட்சி நாளன்று இந்தி இந்திய அரசியன் மொழியாக வேண்டு மென்று முந்தியே திட்டமாகிவிட்டதால், மாணவர் அதற்கு முந்தின நாளே கிளர்ச்சி தொடங்கினர். அவர் இந்தி யெதிர்ப்பு அமைதியாக வும் சட்டத்திற் குட்பட்டும் தொடங்கினும், பேராய வெறியரின் வன்செயலும், பதின்மர் தீக்குளிப்பிற்கும் இரங்காத திரு. பத்தவச்சல னாரின் கன்னெஞ்சமும் அவர்க்குச் சினமூட்டின. அதனால் அவரிளமை யுணர்ச்சி பொங்கியெழுந்து அவரையும் வன்செயலில் ஈடுபடுத்திற்று. அதைக் குறும்பரும் குமுகாயப் பகைவரும் பயன்படுத்தி நாட்டுடைமைக்குப் பெருஞ்சேதத்தை விளைத்து விட்டனர். உடனே திரு. பத்தவச்சலனார் தம் அதிகாரத்தாற் கலகத்தைப் படைகொண்டடக்கி நடுவணரசின் பாராட்டையும் இந்தியாரின் எடுத்தேத்தையும் பெற்றார். அடுத்த பைதிரங்களி லிருந்து வந்த ஆயிரக்கணக்கான ஊர்காவலரைத் துணைக்கொண்டு தமிழ்நாட்டு ஊர்காவலரும் தம் புறக்கரண ஆற்றல் முழுமையையுங் காட்டி விட்டனர். கலகத்தொடு வெளிப்படை யிந்தியெதிர்ப்பும் அடங்கிற்று.

ஆனைமுகவரைப் பிடித்த கலி அரசமரத்தையும் பிடித்தது போல், மாணவரொடு கல்லூரியுள் நின்ற விரிவுரையாளர் முதல்வர் முதலியோரும் நையப் புடையுண்டனர். ஆசிரியர் தம் தகுதி நோக்கி அதை முற்றும் மறந்துவிட்டாரேனும்,மாணவர் அதை மறவா திருந்து 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பழிக்குப் பழிவாங்கிப் பேராயத்தை வீழ்த்தியதுடன், காட்சிக் கரியராயிருந்த திரு. பத்தவச்சலனாரையும் காட்சிக் கெளியராக்கி விட்டனர்.

தி. மு. க ஆட்சியேற்றது. திரு. அண்ணாதுரையார் முதலமைச் சரானார். பெரும்பான் மக்கள் மகிழ்ந்தனர். ஆயின், பேராயத் தார்க்குக் காழ்ப்பேறி மெல்ல மெல்ல வெளிப்பட்டது.

தமிழ்நா டுள்ளிட்ட எட்டுப் பைதிரங்களிற் பேராயம் தோல்வியடைந்ததினாலும், அவற்றுள் அனைத்திந்தியப் பேராயத் தலைவரும் நடுவண் மந்திரிமாரும் நாட்டு முதலமைச்சரும் அவர் துணைவருள் ஒருவர் தவிர எல்லாரும் மண்கெளவிய சென்னைப்