உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திப் போராட்டம்

(15)

(16)

(17)

(18)

41

1958-ல் திரு. அண்ணாதுரையார் தம் பாராளுமன்ற முதற்பேச்சிலேயே இந்தியெதிர்ப்புக் கொள்கையைத் தளரவிட்டமை.

திரு. அண்ணாதுரையார் நேரு உறுதிமொழியை நிறைவேற்றினாற் போதும் என்றமை.

1967-ல் இறுதியில் இந்திய ஆட்சிமொழிச் சட்டத் திருத்தம் இந்தியார்க்குச் சார்பாக மாற்றப்பட்டபோது அதை வன்மையாக எதிர்க்காமை.

கோலாலம்பூரிற் போன்றே சென்னையிலும் வையா புரிகள் கூட்டம் உலகத் தமிழ் மாநாட்டுக் கருத் தரங்கை நடத்தித் தமிழைப் பழிக்கவிட்டமை.

(19) தமிழைத் திரவிடத்தின்று பிரித்தறியாமை.

(20)

(21)

(22)

(23)

இயன்றவரை தமிழ்த் தூய்மை பேணாமை.

தி.மு.க. அரசு இந்தி நீக்கத் தீர்மானம் தமிழ்நாட்டுச் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பின்பும் அதில் முழுவுறுதியாய் நிலைத்து நில்லாமை.

இந்தியார்க்குச் சார்பாக அமைந்திருக்கும் அரசிய லமைப்புத் திருத்தப் பெறாமை.

இந்திச்சார்பான

யிருத்தல்.

நடுவணரசிடம் இந்தியப்படை

(24) தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர் இன்றும் இந்திச் சார்பாயிருத்தல்.

(25) தமிழ்நாடும் வங்கமும் தவிர எல்லாப் பைதிரங்களும் இந்தியை இந்தியப் பொதுமொழியாக ஏற்றுக் கொண்ட மை.

(iii) மூன்றாம் போராட்டம்

1967 இறுதியில், இந்தியப் பாராளுமன்ற உறுப்பினருள் இந்தியாரின் பெரும்பான்மையை நேர்மையில்லாவகையிற் பயன் படுத்தி இந்தியார்க்குச் சார்பாக மாற்றப்பட்ட நேரு உறுதி மொழியும், அதனுடன் இணைக்கப்பட்ட மொழிக்கொள் கைத் தீர்மானமும், நிறைவேற்றப்பட்டதின் விளைவாக மூன்றாம் இந்தி யெதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டு மாணவரிடை எரிமலைக் கொதிப்புப்போற் பொங்கிக் கிளர்ந்து நாடுமுழுதும் பரவியது.