உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

முப்போராட்டங்களுள், முதலது பெரியோராலும் பொது மக்களாலும், இடையது டையது மாணவராலும் மாணவராலும் பொதுமக்களாலும், இறுதியது முற்றும் மாணவராலும் நடத்தப் பெற்றனவாகும். இம் மூன்றும் வலிமையில் முறையே ஒன்றினொன்று வளர்ந்து வந்தன வாகும்.

இரண்டாம் போராட்டச் சிறப்பு நிகழ்ச்சி நடுவிளம் பருவக் கட்டுடம்பினர் பதின்மரின் தீக்குளிப்பெனின், மூன்றாம் போராட்டச் சிறப்புநிகழ்ச்சி மூவரசினர் கல்லூரியில் தற்சார்பு தமிழகக் கொடி யேற்றியதாகும்.

புலிவேட்டைக்குச் சென்ற புது வேட்டுவன் புலித்தடங் கண்டு அஞ்சி ஓடி வந்துவிட்ட கதைபோல், இந்தியெதிர்க்கத் தில்லி சென்ற சென்னை இந்தியெதிர்ப்பு மாணவரும் தேசியப் பேராய மாணவர் போன்றே நேரு உறுதிமொழியை நிறைவேற்றினாற் போதுமென்று கூறிக் கோட்டைவிட்டுத் திரும்பிவிட்டாரேனும், இருபெரு வேந்தரும் ஐம்பெரு வேளிரும் மாபெரும் படையொடு தன்னை ளைஞனென இகழ்ந்து எளிதாய் வல்ல வந்தபோது, எட்டுணையும் அஞ்சாது எதிர்சென்று அட்டுவென்ற பைந்தமிழ் மறவரேறு பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற மதுரை கோவை மாணவரும், அவரைப் பின்பற்றின நெல்லை சேல நீலமலை மாணவரும், சென்னைப் புதுக்கல்லூரி மாணவரும், இந்தி ஒழிந்தாலெழியப் போரை விடோம் எனக் கிளர்ந்தெழுந் தாரவாரித்தனர்.

தக்க சமையத்தில் முதலமைச்சர் திரு. அண்ணாதுரையார் சென்னைச் சட்டப்பேரவையில் இந்தி நீங்கிய இருமொழித் திட்டத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டதனால், மாணவர் இந்தியெதிர்ப்பு உடனே அடங்கிற்று. அதன்பின் நிகழ்ந்ததெல்லாம் மழை நின்றபின் தொடர்ந்த தூவானமே. வடநாட்டு ஊர்காவற்படையும் பொருநர் படையும் வருவிக்கப்படாமலும் ஒருவரும் சுட்டுக் கொல்லப் படாமலும், மூன்றாம் இந்தியெதிர்ப்புப் போராட்டம் அடக்கப் பட்டது, தி. மு. க. அரசிற்குப் பாராட்டிற்குரிய வெற்றியே.