உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




V. பல்வேறு செய்திகள்

காமராசர் வீண் முயற்சி

இந்தியெதிர்ப்பு முற்கூறியவாறு, விரைந்து புகுத்துவதை எதிர்ப்பதும் வரையறவாய் எதிர்ப்பதும் என இருவகை. இவ் விரண்டுள் முன்னது திரவிடரது; பின்னது தமிழரது. காமராசர் தமிழராயினும். இந்தியைப் புகுத்தும் பேராயக் கட்சியைக் சேர்ந்த வராதலின், திரவிடர் கொள்கையினரே.

இந்தியை வரையறவாய் எதிர்ப்பவரும், ஆங்கிலப் பற்றினால் எதிர்ப்பவரும் தமிழ்ப் பற்றினால் எதிர்ப்பவரும் என இரு சாரார். ரு தமிழ்ப்பற்றா லெதிர்ப்பவர் தூய தமிழர்; ஆங்கிலப் பற்றா லெதிர்ப்பவர் தமிழ்நாட்டிலும் திரவிடநாடுகளிலும் உள்ள ஆங்கில அறிஞர்.

இந்தியை எதிர்க்கும் வங்கநாடு வடநாடுகளுள் தனிப்பட்டது. அந் நாட்டாருட் பெரும்பாலார் தாய்மொழிப் பற்றும் சிறுபாலார் ஆங்கிலப் பற்றுங் கொண்டு இந்தியை யெதிர்ப்பதாகக் தெரி கின்றது. வங்கமொழி தமிழ்போல் ஆரியச் சார்பற்றதும் ஆரியத்திற்கு மூலமான உயர்தனிச் செம்மொழியன்றாதலின், தாய்மொழிப்பற்றுக் கரணியமாக இந்தியை எதிர்ப்பாருள்ளும், வங்கர்க்கும் தமிழர்க்கும் முனைப்பளவிற் பெரிதும் வேற்றுமையுண்டு.

காமராசர் பதினாறாட்டைப் பருவத்திலேயே பேராயத் தொண்டர் படையிற் சேர்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. அவர் நடுநிலைப் பள்ளிக் கல்விக்குமேற் கல்லாமையால், அவர்க்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமையோ பற்றோ இருக்கமுடியாது. திரு. வி. க. போன்றோரின் நெருங்கிய தொடர்பும் அவர்க் கிருந்த தாகத் தெரியவில்லை. தமிழ் வரலாறும் தமிழ்நாட்டு வரலாறும் அவர் அறியாமையால், ஆங்கிலராட்சி அடிமையாட்சி யென்றும், அதனால் தீமையேயன்றி நன்மை யில்லையென்றும், ஆங்கிலர் நீங்கியவுடன் தமிழ்நாடு விடுதலை பெற்றுவிட்ட தென்றும் தமிழ் நாட்டிற்குத் தாம் செயற்கரிய தொண்டு செய்துவிட்டதாகவும், தவறாகக் கருதிக்கொண்டிருக்கின்றார். அவர் செய்த சிறப்புத்