உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

தொண்டெல்லாம் திரு. இராசகோபாலாச் சாரியார் புகுத்தவிருந்த பிறவிக்குலத் தொழின்முறைத் துவக்கக் கல்வியைத் தடுத்ததே. அதற்கும் கரணியம் நயன்மை(நீதி)க் கட்சித் தலைவர் கால் நூற்றாண்டாகச் செய்துவந்த குடிசெயல்தொண்டே. அந் நயன்மைக் கட்சித் தொண்டிற்கும் கரணியமாயிருந்தவை ஆங்கிலராட்சியும். ஆங்கிலக் கல்வியுமே.

ஒரு நாடு முன்னேறுவதற்கு, அந் நாட்டு வரலாறும் மொழி வளர்ச்சியும் மக்களொற்றுமையும் இன்றியமையாதனவாம். தமிழ் நாட்டில் இம் மூன்றிற்கும் முட்டுக்கட்டையாக இருப்பது ஆரியமே. தமிழ்நாட்டுப் பேராயம் ஆரியத் தலைமையில் தோன்றியமையாலும், இன்றும் தமிழர்க்கும் தமிழுக்கும் மாறான மொழித் திட்டமே கொண்டிருப்பதாலும், அக் கட்சியைச் சேர்ந்தவர் தமிழராயினும் உட்பகையாகவே கருதப்படுவர்.

"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்குங் கொல்குறும்பும் இல்லது நாடு'

"நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

(குறள்.735)

இன்னாவாம் இன்னா செயின்'

(குறள். 881)

ce

"அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு(து)

உட்பகை யுற்ற குடி

(குறள். 88)

"உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று'

(குறள். 890)

திரு. காமராசர் பேராயத்தாலேயே முன்னேற்றமும் தலைமையும் அடைந்தவர். அக் கட்சியை விட்டு நீங்க அவர்க்கு விருப்ப மில்லை. அக் கட்சியி லிருப்பதற்கு இந்தியை ஏற்பது இன்றியமை யாதது. இளமையிலிருந்து ஆரியச் சூழலிற் பயின்றமையால் அவர்க்குத் தமிழ்ப் பற்றில்லாது போயிற்று; மேற்கல்வி யின்மையால் மொழிகளின் ஏற்றத்தாழ்வும் அவர்க்குத் தெரியவில்லை; அரசியலில் தலையிடாது எஞ்சிய காலத்தை அமைதியாய்க் கழிக்கவும் அவர் விரும்பவில்லை. ஆகவே, இந்திய ஒற்றுமையின் பேரால் தமிழ்நாட் டில் இந்தியைப் புகுத்தத் திட்டமிட்டிருக்கின்றார். இந்திய வொற்றுமை நல்லதுதான். ஆயின், அவ் வொற்றுமைக்கு இந்தியாரு மன்றோ இசையவேண்டும். இந்தியா துண்டுபடினும் படுக. எங்கள் தாய்மொழியை ஏனை யிந்தியரெல்லாம் கற்றே யாகவேண்டும். ஆங்கிலம் இந்திய ஆட்சிய மொழியும் இணைப்பு மொழியுமாய்த் தொடரவிடோம்” என் என்று அவர் ஒருதலையொட்டாரம் (Hobson`s Choice)செய்யின், இந்தியால் தமிழ்கெடுமென்றஞ்சும் தமிழர் எங்ஙனம் இணங்கி வரமுடியும்?