உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

45

இந்தியால் தமிழ் கெடாது என்று திரு. காமராசர் சொல்வ துண்டு. அங்ஙனம் சொல்ல அவர்க்கு என்ன தகுதியுள்ளது? ஓர் உணவுப்பொருள் உடல்நலக்கேடான தென்று ஒரு நாட்டுத் தலைமை மருத்துவர் கூறின், அதற்கு மாறாக அப் பொருளை விற்கும் கடை காரன் அல்லது அவனுடைய வேலைக்காரன் சொல்லுவது செல்லுமோ? இந்தியால் தமிழ் கெடுமென்றறிந்தே ‘இந்தி பொது மொழியா?' என்னும் சுவடியை வெளியிட்டார் தவத்திரு மறைமலையடிகள். பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை; கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை; பற்றும் புலமையும் அற்ற மற்றவருக்குத் தெரியுமா நற்றமிழ்ப் பெருமை?

இனி, இந்தியால் தமிழ் கெடாது என்பதற்கு, "ஆங்கிலம் வந்ததே! அதனால் தமிழ் கெட்டதா? அதுபோல் இந்தி வந்தாலும் தமிழ் கெடாது” என்று திரு. காமராசர் எடுத்துக்காட்டுகின்றார். ஆங்கிலம் நமக்கு இன்றியமையாத அறிவியன் மொழியாய் வந்தது. ஆதலால் நாம் அதை விரும்பிக் கற்றோம், கற்கிறோம், கற்போம். இந்தி நமக்குத் தேவையானதன்று. அதைக் கற்கச் செலவிடும் காலமும் முயற்சியும் பணமும் வீணே. மேலும், ஆங்கிலம் தமிழைக் கெடுக்கவேண்டும் என்றோ, தமிழனை அடிமைப்படுத்த வேண்டு மென்றோ வரவில்லை. தமிழைக் கருத்தால் வளம்படுத்தவும் தமிழனை அறிவால் மேம்படுத்தவுமே அது வந்தது. இந்தியோ நாளடைவில் தமிழை வழக்கு வீழ்த்தித் தமிழப் பொதுமக்களின் பேச்சுமொழியாக வேண்டுமென்றும், தமிழர் என்றும் இந்தியார்க்கு ஆட்பட்டிருக்க வேண்டுமென்றும், தீய நோக்கத்துடனேயே புகுத்தப்படுகின்றது. ஆங்கிலம், ஒருகாலும் இந்திபோற் பொது மக்கள் பேச்சாக முடியாது என்று இந்தியாளர் கூறுவதினின்றே அவர் அடிப்படை நோக்கத்தைப் பகுத்தறிவாளர் அறிந்து கொள்ளவேண்டும். இது உய்த்துணருங் கூர்மதியை வேண்டாத வெளிப்படைக் கூற்றே.

ஆங்கிலர் தமிழை விரும்பிக் கற்று அதன் சிறப்பை அவரே நமக்கு எடுத்துக்காட்டினர். தமிழைத் தூய்மையாய்ப் பேசவேண்டு மென்பதே அவர் கருத்து. தமிழர்தாம் ஆங்கிலச் சொற்களை வேண்டாது (அனாவசியமாய்) தமிழிற் கலந்து பேசிவருகின்றனர். அதோடு சென்னையை ‘மெட்றாஸ்' என்று ஆங்கிலப் பெயராலும், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி முதலிய நகரப் பெயர்களை ஆங்கில வொலிப்பாலும், குறிப்பது உயர்வென்று கொண்டு மொழித்துறையில் மிக இழிந்தநிலை யடைந்துள்ளனர். ஆங்கிலர் தமிழைக் கெடுக்காதபோதே, தமிழர் தாமாக ஆ ஆங்கிலச்சொற் கலந்து பேசுவாராயின், இந்தியார் தமிழை ஒழிக்க