உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

வேண்டுமென்றே இந்தியைப் புகுத்தும்போது, தாய்மொழிப்பற்றற்ற (மாபெரும்பான்மையரான) போலித்தமிழர் எத்துணை இந்திச் சொற்களை இந்தியார் மனமகிழக் கலந்து பேசுவர்!

இந்தியார் ஆங்கிலம் கற்பதுபோல் தமிழரும் இந்தி கற்க வேண்டும். தமிழர் இந்தியை வெறுப்பின் இந்தியர் ஆங்கிலத்தை வெறுப்பர். அதனால் ஓற்றுமை கெடும்; இந்தியா சின்னபின்ன மாய்ச் சிதைந்துபோம். ஆதலால் தமிழர் இந்தியைக் கற்கவேண்டும்” என்பது, எத்துணைப் பகுத்தறிவிற் கொவ்வாக் கூற்றாம்.

க்கால நாகரிக வாழ்விற்கு இன்றியமையாத ஆங்கிலத்தைக் கல்லாது இந்தியார் தாமே தம் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ள விரும்பின். அதைத் தடுக்கத் தமிழர் ஏன் இந்திக் கல்வித் தண்டனை யடையவேண்டும்? செல்லப்பிள்ளை முரண்டு கொண்டு சோறுண்ணாவிடின்,பித்துக்கொண்ட பெற்றோர் அதைச் சோறுண்ண வைக்கும்படி அது கேட்டதை யெல்லாம் கொடுப்பர்; சொன்ன படியெல்லாம் செய்வர். ஆயின், பிறர் அங்ஙனம் செய்வரோ? தமிழ்நாடு பிரியினும் பிரிக, நாங்கள் ஆங்கிலங் கல்லோமென்று இந்தியாரே ஒற்றுமையைக் குலைத்துப் பிரிவினைக்குத் தூண்டும் போது, தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர் ஏன் இந்தியாவையே படைத்துக் காத்து வந்தவர்போல் தம் தலையில் இடித்துக் கொள்ள வேண்டும்? இதனால், தமிழ்நாட்டை இந்தியார்க்குக் காட்டிக் கொடுத்தே அவர் தம்மை உயர்த்திக் கொண்டமையும், அவ் வுயர்பதவியிலேயே இறுதிவரை நிலைத் திருக்க அவர் விரும்புவதும், தெள்ளத் தெளிவாய்த் தெரிகின்றன வன்றோ?

கிய

இந்திய ஒற்றுமைக்கும் இந்தியை ஏன் தமிழர் கற்கவேண்டும்? போக்குவரத்து, தற்காப்பு, காசடிப்பு, வெளிநாட்டுறவு ஆ நான்கும் நடுவணாட்சிக் குட்பட்டிருப்பதே ஒற்றுமையைக் காத்துக் கொள்ளுமே! ஒற்றுமை குலையாதபோதும் தமிழர் இந்தியைக் கற்றுத்தான் ஆகவேண்டுமெனின் அது அவரை அடிமைப்படுத்த வேண்டும் என்பதையன்றோ காட்டுகின்றது!

மேலும், ஆங்கிலங் கல்லாது தாழ்வடைந்து இடர்ப்பட்ட பின், பசித்த பிள்ளை சோறுண்பதுபோல் இந்தியார் தாமே ஆங்கிலங் கற்கத் தொடங்குவர். தமிழ்நாட்டு அல்லது தென் னாட்டுப் பேராயத்தலைவர் தம் சார்பாயிருக்கின்றன ரென்று கண்டுகொண்டே, இந்தியார் ஒரே பிடியா யிருக்கின்றனரேயன்றி வேறன்று. தமிழரும் திரவிடருமோ அல்லது தமிழர் மட்டுமோ கருத்து வேறுபாடின்றி எல்லாரும் ஒற்றுமையாயிருப்பின், இந்தியார் இங்ஙனம் முரண்டுசெய்யார்.