உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

47

இனி, பாராளுமன்ற மொழிக்கொள்கைத் தீர்மானத்தினால் இந்தியார்மேலும் ஏனையர்மேலும் விழுந்துள்ள கல்விச்சுமையைச் சமப்படுத்த வேண்டுமென்னும் கூற்று, பகுத்தறிவில்லார்க்கும் பரமார்த்த குரு மாணவர்க்குமே ஏற்கும். இந்தியார் இந்தியை ஒரே இந்திய ஆட்சிமொழியும் இணைப்பு மொழியு மாக்கவேண்டு மென்பதை எவ்வகையிலும் மாற்றொணாக் கொள்கையாகக் கொண்டிருக்கும்போது, வடக்கும் தெற்கும்போல் நேர்மாறாக வேறுபட்டிருக்கும் இருசாராரையும் எங்ஙனம் ஒப்புரவாக்க இயலும்? நிலவரைப்பு ஒன்றாயிருந்தால்மட்டும் போதுமோ? தவளை தண்ணீர்க்கும் எலி திட்டைக்கும் இழுக்கும்போது, இரண்டையும் இணைக்கும் கயிற்றால் என்ன பயன்? வண்டியிற் பூட்டிய இரு காளைகளுள் ஒன்று வடக்கும் ஒன்று தெற்குமாக இழுக்கும்போது, இரண்டையும் இணைக்கும் நுகக்கோலால் என்ன பயன்?

இந்தி இந்தியார்க்குத் தாய்மொழி; அதை எளிதாய்க் கற்றுத் தேர்ச்சி பெறுவார். ஆங்கிலம் மேற்கல்விக்கும் மொழிபெயர்ப் பிற்கும் வெளிநாட்டுச் செலவிற்கும் பெரும்பதவிப் பேற்றிற்கும் அவர்க்கு இன்றியமையாதது. ஆகவே, ஆங்கிலம் ஒன்றே அவர் கற்க வேண்டிய அயன்மொழி. அதைக் கற்றாற் பெரும்பயன்; கல்லாக்காற் பேரிடர்ப்பாடு, தமிழர்க்கோ இந்தி தேவையில்லா அயன்மொழி; ஆங்கிலம் இன்றியமையாத அயன்மொழி. ஆகவே ஈரயன் மொழி யொடு தமிழுஞ் சேர்ந்து மும்மொழியாகும். மேலும் இந்தி அடிமைப் படுத்துவது; ஆங்கிலம் பெருமைப்படுத்துவது. இங்ஙனம் இரு மொழியும் மும்மொழியுமாயும், இன்றியமையா மொழியும் தேவை யில்லா மொழியுமாயும், பெருமைப்படுத்தும் மொழியும் அடிமைப் படுத்தும் மொழியுமாயும்,ஓரயன்மொழியும் ஈரயன் மொழியுமாயும், இருசாரார் மொழிக் கல்வியும் வேறுபடும் நிலையில் ஏற்றத் தாழ்வான சுமையை எங்ஙனம் சமப்படுத்த வியலும்?

இந்தியார்க்கு ஆங்கிலந் தேவையில்லை யென்பதும் அவர் அதைக் கல்லார் என்பதும், தென்னாட்டாரைத் தெம்மாடிக ளென்று கொண்டு கூறும் தித்திரிப்பும் தித்திருக்குமேயன்றி வேறன்று. மும்மொழித் திட்டத்தின் முழுப்புரட்டு

இந்திச் சார்பான நடுவணரசியலார் மும்மொழித் திட்டத்தை வகுத்ததே இந்திபேசா நாடுகளில், இந்தியை மெல்ல மெல்லத் திணிப்பதற்குத்தான். தன்மானமற்ற தென்னாட்டுத் தன்னலப் பேராயத் தலைவர், அத் திட்டத்தை ஆரிய அடிமைத்தனத்திற்குப் பேர்போன திரவிட -தமிழ் மக்களிடை எள்ளளவும் எதிர்ப்பின்றிப் புகுத்திவிட்டனர்.