உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

இம் மும்மொழித் திட்டம் இந்தியா முழுதும் ஒரு திறப்பட்ட தன்று. தென்னாட்டார்க்குத் தாய்மொழியும் ஆங்கில மும் இந்தியும்; இந்தி நாட்டார்க்கோ தாய்மொழியும் ஆங்கிலமும் ஏதேனுமொரு தென்னிந்திய மொழியும். ஆகவே, இந்தியார் தமிழையோ திரவிட மொழிகளுள் ஏதேனும் ஒன்றையோ மூன்றாம் மொழியாகத் தெரிந்துகொள்ளலாம். இதிலேயே வேறுபாடும் ஏற்றத்தாழ்வும் ஏற்பட்டுவிட்டன. திரவிட மொழிகள் சொல் வளத்திலும் இலக்கிய விலக்கணத்திலும் தமிழுக்குச் சமமானவை யல்ல. தமிழைக் கற்பவருக்கு முயற்சி மிகுதியாக வேண்டியிருக்கும். அதற்குத் தமிழ்ப் பற்று வேண்டும். அதை இந்தியாரிடம் எதிர்பார்க்க முடியாது. மேலும் தென்னிந்திய மொழிகள் அவர்க்குப் பயன்படு பவையல்ல. இதனாலேயே அவர் மூன்றாம் மொழி கற்கவில்லை. அதனால் இந்தி நாட்டாரும் மும்மொழித் திட்டத்தைக் கைவிட்டனர்.

இன்று தென்னாட்டில், சிறப்பாகத் தமிழ்நாட்டில், ஏற்பட்ட இந்தியெதிர்ப்புக் கிளர்ச்சியின் விளைவாக, நடுவணரசியலர் மீண்டும் மும்மொழித் திட்டப் பல்லவியைப் பாடிவருகின்றனர். இந்தியை விரைந்து ஒரே இந்திய அரசியன் மொழியாக்காவிடின் பேராயத்தை விட்டு விலகிவிடுவோம் என்று இந்திவெறியர் கட்டுப்பாடாகக் கூறுவதால், பேராயக் கட்சியாராகிய நடுவ ணாட்சித் தலைவர் தம் பதவி போய்விடுமேயென்றஞ்சி, தந்நலம் பற்றி, இந்தி பேசா நாடுகளிலும் இந்தியைத் திணிக்கத் தீர்மானித்து மும்மொழித் திட்டத்தை மேற்கொள்ள வற்புறுத்துகின்றனர்.

இந்தி நாடுகளில் மாணவர், பொதுமக்கள், அரசினர் ஆகிய முத்திறத்தாரும் ஒற்றுமைப்பட்ட ஒரு கொள்கையர். அங்கு மும் மொழித் திட்டம் என்பது பெயரளவிலேயே இருக்கும். அடிமைத் தனத்தில் ஊறிப்போன தென்னாட்டார்தாம் மும்மொழித் திட்டத்தை உண்மையாகக் கடைப்பிடிக்கின்றனர். இந்தி இந்திய ஆட்சிமொழியாகவும் இணைப்பு மொழியாகவும் நிலைத்தபின், இந்தி நாடுகளில் மும்மொழித் திட்டம் பெயரளவிலுமிராது.

தமிழர்க்கு இந்தி தேவையில்லை. இந்திக் கல்வியை வற்புறுத்த வற்புறுத்தத் தமிழர்க்கு அதன்மேல் வெறுப்புத்தான் மிகும். ஆங்கிலமோ தமிழ்நாட்டில் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.

ஆதலால், தாய்மொழியும் ஆங்கிலமும் கொண்ட இரு மொழித் திட்டமே எல்லா நாடும் மேற்கொள்ளத் தக்கதாம்.

கேரளம், மைசூர், ஆந்திரம் ஆகிய திரவிட நாட்டார் ந்தியை விரும்பின் மும்மொழித் திட்டத்தை மேற்கொள்ளட்டும். ஆயின், இந்தியார்க்கு முகவராகவோ கையாளராகவோவிருந்து தமிழ்நாட்டிலும் அதைப் புகுத்த முயல்வதை அடியோடு விட்டு