உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

49

விடுக. ஆரியத்தொடு கூடித் தயிர்போல் மாறியுள்ள திரவிட நிலையும், ஆரியக் கலப்பு வேண்டாது பால்போல் தூயதாகவுள்ள தமிழ் நிலையும், வேறுபட்டனவாம்.

இந்தியாரின் ஒட்டாரம்

இதுவரை நிகழ்ந்து வந்த செய்திகளை நோக்கின், ஆரிய வெறியும் இந்தி வெறியும் ஒருங்கே கொண்ட வடநாட்டுப் பேராயத் தலைவர், தமிழ்நாடும் திரவிட நாடுகளுமாகிய தென்னாட்டுப் பேராயத் தலைவரின் ஆரியச் சார்பையும் அடிமைத்தனத்தையும் நன்கறிந்து, இந்தியை எங்ஙனமும் ஒரே இந்திய ஆட்சிமொழி யாகவும் இணைப்பு மொழியாகவும் Fணித்துவிட வேண்டுமென்று திட்டமிட்டு, அடிநாளினின்றே கட்டுப்பாடாகவும் சன்னஞ்சன்ன மாகவும் இதற்கு வேண்டிய முயற்சிகளை யெல்லாம் செய்து வந்திருப்பதாகத் தெரிகின்றது.

தமிழ்நாட்டில் இந்தி புகுத்தப்பட்டதிலிருந்து, தமிழர் என் னென்ன வகையில் தம் எதிர்ப்பைக் காட்டிவரினும், இந்தி வெறியர் அதை எள்ளளவும் பொருட்படுத்துவதில்லை. ஆங்கிலமே இந்தியப் பொதுமொழியும் ஆட்சிமொழியுமா யிருக்க வேண்டுமென்று, பேரறிஞரும் பெருந்தகையரும் ஏரணமுறையில் எத்தனை ஏதுக் களை எடுத்துக் கூறினும், சிறிதும் செவிசாய்ப்பதும் கருதிப் பார்ப்பதுமில்லை.

தமிழ்நாட்டார் இந்தியை ஏற்காவிடின் படையனுப்பி யடக்க வேண்டுமென்று, முதலில் ஒரு பொறுப்பற்ற இந்திக் கிறுக்கர் பிதற்றி யிருக்கின்றார். அண்மையில், பொறுப்பு வாய்ந்த துணைத்தலைமை மந்திரிப் பதவியிலிருக்கும் ஒருவர் திரு. காமராசருடன் இந்திபற்றி உரையாடும்போது, உறழ்ந்து சீறி, தமிழ்நாடு இந்தியை ஏற்காவிடின், படையனுப்பி மூவாண்டிற்கு மேலவர் ஆட்சியைப்புகுத்திவிடுவோம் என்று உறுமி யிருக்கின்றார். திரு. காமராசர் தமிழர் தன்மானத்தைக் காத்திருந்தால் அன்றே தமிழ்நாட்டுப் பிரிவினையைத் தொடங்கி யிருப்பார். நாடு முழுதும் அவரைப் பின்பற்றியிருக்கும். உலகம் போற்ற இறுதிவரை எதிர்ப்பில்லாத் தலைவராகத் தமிழ்நாட்டை ஆளும் நிலைமையை அடைந் திருப்பார்.

முதற்றரக் கொடுங்கோல் முட்டாள் முரடனென்று கருதப்படும் முகமது துகளாக்கும் சொல்லக் கூசியிருக்கும் சொற்களை, அறிவாராய்ச்சியும் உரிமை யுணர்ச்சியும் மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிறுதியில், வடநாட்டில் ஒருவர் தமிழரை அடிமை யரெனத் தாழ்வாகக் கருதிச் சொல்லத் துணியின், வடிம்பலம்பநின்ற பாண்டியனும், தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியனும்,