உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

கனகவிசயர் தலையிற் கண்ணகி சிலைக் கல்லை யேற்றிக் கொணர்ந்த சேரன் செங்குட்டுவனும் ஆண்ட இத் தமிழகத்தில், மூத்தோரும் முதியோரும் நரம்பறுந்து நடுங்கிச் சாகினும் கட்டிளங்காளை யரான L மாணவத் தமிழ்மறவர் மடங்கியொடுங்கி போவரோ?

யடங்கிப்

இந்தியை இந்தியப் பொதுமொழியாக்குவதற்கு நீண்டகால மாகத் தேசிய ஒற்றுமையை நோக்கமாகக் காட்டி வந்தவர், இன்று அக் கரணியம் ஒப்புக்கொள்ளப்படாமை கண்டு, வடவர் ஆங்கிலங் கற்பதால் தென்னவர் இந்தி கற்க வேண்டும் என்று புதிதாக உத்திக்குச் சிறிதும் பொருந்தாவகையில் தருக்கி வருகின் றனர். இது, இந்தியா அமெரிக்க ஒன்றிய நாடுகளை (U.S.A.) நோக்கி, நான் உங்கள் புகைவண்டிச் சூழ்ச்சியங்களை (Engines) விலைக்கு வாங்குவதால், நீங்கள் என் கட்டைவண்டிகளை வாங்கித்தான் ஆக வேண்டும் என்று சொல்வது போன்றன்றோ இருக்கின்றது!

ஏதேனும் ஒரு சாக்குப் போக்கைச் சொல்லி இந்தியைத் திணிக்கப் பார்ப்பது, 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்;' என்ற கதையை யன்றோ ஒத்திருக்கின்றது !

இந்தி நீங்கிய இருமொழித் திட்டத் தீர்மானம் சென்னைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்பும், இந்தி நாட்டார் நிலையாகவும் உண்மையாகவும் மும்மொழித் திட்டத்தை மேற்கொள்ளாரென்று திட்டமாகத் தெரிந்திருந்தும், ஓரியன்மைக் (uniformity) கரணியங் காட்டிச் சென்னைத் தீர்மானத்தை மாற்றச் சொல்கின்றனர்.

மொழியிலக்கியப் பண்பாட்டு நிலையில், தூய்மையும் கலப்பும்பற்றித் தமிழ் வேறு, திரவிடம் வேறு என்று ஆனபின், திரவிட நாடுகள் ஏற்கும் மும்மொழித் திட்டத்தைத் தமிழ்நாடு. எங்ஙனம் ஏற்கமுடியும்? அங்ஙனம் ஏற்பின், ஆகாசவாணியை வானொலியென்றும், இசையரங்கில் தமிழ்ப்பாட்டையே சிறப் பாகப் பாட வேண்டுமென்றும், 'ஸத்யமேவ ஜயதே' என்பதை "வாய்மையே வெல்லும்” என்றும், தேசிய மாணவர்படை யேவற் சொற்களைத் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் சிறப்பாகச் சொல்ல வேண்டும்?

தி. மு. க. கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறுதற்குப் படியரிசித் திட்டம் ஓரளவு ஏதிடா யிருந்திருக்குமேனும், இன்றும் இனியும் ஆட்சியில் நிலைத்திருக்கவும் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறவும் தமிழே துணையாயிருக்கும் என்பதை, எவரும் மறுக்க முடியாது. ஆகவே, இந்திவெறியர்க்கும் நடுவணரசிற்கும் இணங்கிக் கொள்கையை விட்டுக்கொடுத்துத் தமிழைக் காட்டிக் கொடுப்பின்,