உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

51

தமிழைக் காப்பவர் பக்கமே ஆட்சியும் சாரும் என்பதை அறிதல் வேண்டும்.

தமிழிநாட்டு மொழிச்சிக்கலைத் தீர்க்கத் தக்கார் யார்?

இந்தியால் தமிழ் கெடுவதும் எதிர்காலக் குடிவாணராகிய இற்றை மாணவரே இந்திக் கல்வியால் தாக்குண்பதும் தெளிவாகத் தெரிவதனால், தமிழ்ப் புலவரும் தமிழ்நாட்டு மாணவருமே தமிழ் நாட்டு மொழிச்சிக்கலைத் தீர்க்குந் தகுதியுடையார்.

இந்தியால் தமிழ் கெடுமென்றும் ஆங்கிலமே இந்தியப் பொதுமொழியாகத் தக்கதென்றும், தமிழ்ப் புலவர் தலைவரான தவத்திரு மறைமலையடிகள் முன்பே கூறிவிட்டார்கள். ஆதலால் அதுபற்றி மீண்டும் சூழ்வு வேண்டியதில்லை.

தமிழ்நாட்டு மாணவரும், சிறப்பாக நெல்லை மதுரை சேலங் கோவை நீலமலையார், இந்திக் கல்வியால் வீண் கடுஞ்சுமையும் மீளா அடிமைத்தனமும் அறிவிழப்பும் அலுவல் வாய்ப்புக் குறைவும் பொதுமக்கள் வரிப்பணப் பாழ்படுத்தமும் நேருமென வறிந்து, இந்தி வேண்டாவெனவும் ஆங்கிலமே பொதுமொழி யென்றும்

அறுதியாகத் தீர்மானித்துவிட்டனர்.

L மாணவராயினும் பெரியோராயினும், தமிழைத் தூய்மை யாகப் பேண விரும்பும் செந்தமிழரும், கலவைத் தமிழையே வழங்க விரும்பும் கொடுந்தமிழரும், இந்தியை யேற்றுத் தமிழைக் கெடுக்க உடன்படும் போலித்தமிழரும் எனத் தமிழர் மூவகையர். இவருள், மொழிச்சிக்கலைத் தீர்த்தற்குச் செந்தமிழரே முற்றுந் தகுதியுடையர்; தமிழுக்கும் திரவிடத்திற்கும் வேறுபாடு தெரியாத கொடுந்தமிழர் சற்றே தகுதியுடையர்; போலித் தமிழரோ முற்றுந் தகுதியற்றவர்.

இந்தியை யெதிர்த்துத் தமிழைக் காப்பது தமிழ்ப் புலவர் கல்லூரி மாணவர்க்கே தலையாய கடனாயினும், கடந்த முப்போராட்டங் களிலும் ஒரு புலவர் கல்லூரியேனும் ஈடுபடாதது, புலவர் கல்லூரி யாசிரியரின் பண்பாட்டுக் குறைவையே பொது வாகக் காட்டு கின்றது. கட்சித் தலைவர்க்கு மொழிச்சிக்கல் தீர்ப்புத் தகுதியின்மைச் சான்றுகள்: (1) கட்சித் தலைவர் தம் கட்சியை வளர்ப்பதிலும் ஆட்சி யைக் கைப்பற்றுவதிலும் பதவியைக் காத்துக்கொள்வ திலுமே கண்ணாயிருத்தல்.

(2) கட்சித்தலைவர் பெரும்பாலும் இந்தியாராக விருத்தல். அனைந்திந்தியக் கட்சிக்காரருக்குத் தமிழ்ப்பற்றிருக்க டமின்மை.

(3)