உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

(4) பொதுவுடைமைக் கட்சியார் ஆங்கிலத்தைப் பொது வுடைமைக் கொள்கைக்கு மாறான ஆங்கில அமெரிக் கர் மொழியென வெறுத்தல்.

(5) கட்சித் தலைவர்க்குப் பொதுவாக ஆசிரியப் பயிற்சி யின்மை.

(6) சில கட்சித் தலைவர்க்கு மேற்கல்வி யின்மை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ்ப் புலவரும் மாணவருமே மொழிச்சிக்கலைத் தீர்க்கும் தகுதியுடையார் என்பது முன்னரே கூறப்பட்டது. தமிழ்நாடு நீங்கிய இந்தியாவிற்கே ஒரு வட்டநிலைமேடை மாநாடு இன்றியமையாததாகும். அதற்கும், மேனாள் இந்தியத் தலைமைத் தீர்ப்பாளர் சுப்பாராவ், பர்.A. இலக்கு மணசாமி முதலியார், பர். மணவாள இராமானுசம், வயவர் A. இராமசாமி முதலியார் போன்ற கட்சிச் சார்பற்ற பேரறிஞரே தகுதியுடையவராவர். கட்சித் தலைவருள் திரு. C இராசகோபா லாச்சாரியார் ஒருவரே இதற்கு விலக்கானவர். கட்சி சார்பற்ற வருள்ளும் இந்தியார் நடுநிலைமை திறம்பியவராதலின், அவர் தகுதியுடையராகார்.

L

இந்தியப் பொதுமொழியாதற்கு இந்திக்குத் தகுதியின்மை

ஓராட்சிக்குட்படுத்தி,

(1) இந்தியா பல்வேறு மொழியாரும் பல்வேறு இனத்தாரும் பல்வேறு மதத்தாரும், பல்வேறு நிறத்தாரும் வாழும் பல்வேறு நாடுகளைக் கொண்ட உட்கண்டம். சிறியவும் பெரியவுமான 600 நாடுகளைக் கொண்ட இந்தியாவை முதன்முதலாக இந்தியர்க்கு உயர்நிலைக் கல்வி கற்பித்து அவரை ஆட்சித்துறையிற் பயிற்றி, அவரிடம் இந்தியாவை ஒப்படைத்துச் சென்றவர் ஆங்கிலேயர். ஆதலால் நாங்கள் ஆங்கிலராட்சியினின்று இந்தியாவை மீட்டோ மென்றும், அதனால் நாங்கள் புகுத்தும் இந்தியைப் பொதுமொழியாக இந்தியா முழுதும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும், பேராயக் கட்சியார் கூறுவது ஒருசிறிதும் பொருந்தாது.

(2) ஆங்கிலேயர் வடஇந்தியரும் தென்னிந்தியருமான எல்லா இந்தியத் தலைவரிடத்தும் இந்தியாவை ஒப்படைத்தா ரேயன்றி, இந்தியாரிடம் மட்டும் ஒப்படைக்கவில்லை. ஆங்கிலேயர் இந்தியாவை இந்தியரிடம் ஒப்படைத்த போது, இந்திதான் பொதுமொழியாக வேண்டுமென் னும் யாப்புறவு இருந்ததில்லை.

(3)