உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

53

(4) இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அவையிலும், இந்தியை இந்தியப் பொதுமொழியெனத் திட் திட்டஞ் செய்த குழுவிலும், மறைமலையடிகளும், பன்னீர்ச் செல்வமும் போன்ற தமிழறிஞரும் தமிழ்நாட்டுத் தலை வரும் இருந்ததில்லை.

(5) தமிழ்நாட்டுப் பேராயத் தலைவருள் தமிழறிஞரோ தமிழன்பரோ ஒருவருமில்லை. ஆதலால், அவர் தமிழ் நாட்டுப் படிநிகராளியர் (பிரதிநிதிகள்) ஆகார். ஆகவே, இந்திக்கு அவர் தந்த இசைவுஞ் செல்லாது.

(6) இந்தியப் பொதுமொழியைத் தீர்மானிக்கக் கூட்டிய குழுவிலும், தொண்மர் (ஒன்பதின்மர்) ஆங்கிலச் சார்பாக வும் தொண்மர் இந்திச் சார்பாகவும் இருந்திருக்கின்றனர். குழுவிற்குத் தலைமை தாங்கிய இந்தி வெறியாரே (இராசேந்திரப் பிரசாத்) நடுநிலை திறம்பித் தம் இடுகைக் குடவோலையை இந்திக்குச் சார்பாக இட்டு, இந்தியைப் பொதுமொழி யென ஆக்கியிருக்கின்றார். (7) முழுகிப்போன குமரிக்கண்ட மொழியாகிய பழந்தமிழே, திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகிய உலக முதல் உயர்தனிச் செம்மொழி யாகும். அதன் எச்சமாகிய தமிழ் தனக்குரிய தலைமையையும் பெருமையையும் இழக்குமாறு, இந்தி இந்தியப் பொதுமொழியாதல்

தகாது.

(8) இந்தி இலக்கணவொழுங்கற்ற புன்சிறு புதுமொழி. அதைக் கட்டாய மொழியாகக் கற்பதே தமிழனுக்கு இழிவாகும்.

(9) இந்தி இக்காலத்திற்கேற்ற இலக்கியமற்ற மொழி. அதை இந்தி பேசாமக்கள் கற்கச் செலவிடும் காலமும் முயற்சியும் பணமும் வீணே.

(10) இந்தி இந்தியருக்குள்

உண்டுபண்ணாது.

பிளவையன்றி ஒற்றுமையை

(11) அண்மையில் வழங்கும் மலையாள கன்னட தெலுங்கு மொழிகளைவிட அதிகமாக, 1500 கல் தொலைவிற் பேசப்படும் இந்தி தமிழர்க்குப் பயன்பட்டுவிடாது.

(12) ஆங்கிலம் போன்றே இந்தியும் தமிழர்க்கு அயன்மொழி யாகும்.