உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

(13) இந்தி ஆங்கிலக் கல்வியை ஒழிக்கவும், தமிழரை அடிமையராக்கி அடிமைப்படுத்தவும், தமிழை நாளடை வில் வழக்கு வீழ்த்திக் கொல்லவுமே, கட்டாயக் கல்வி யாக வருகின்றது.

(14) இந்தி இந்தியாவிற் பெரும்பான்மை மொழியன்று. இந்தி மக்கள்தொகையைப் பெருக்குவதற்குப் பல்வேறு இன மொழிகளை ஒன்றாகக் காட்டித் தென்னாட்டாரை ஏமாற்றி வருகின்றனர்.

(15) இந்தி சொல்வள மொழியன்று. ஆயிரக்கணக்கான வட சொற்களைக் கடன்கொண்டு, இந்திப் பண்டிதர்க்கும் விளங்கா அளவு நாத்திருகியும் பல்லுடைப்பானும் அலகு பெயர்ப்பானுமாகிய ஏராளமான கூட்டுச் சொற் களைப் புனைந்திருக்கின்றனர். இதனாலேயே இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட தலைமை மந்திரியார் இந்திராகாந்தியாரும், இக்கால இந்தி எங்கட்கும் புது மொழிதான் என்று கூறுகின்றார்.

(16) இக்காலத்துச் சராசரி மாந்தன் திறமை தாய்மொழியும் ஆங்கிலமும் ஆகிய இருமொழியே கற்றுத் தேர்ச்சி பெற உதவும். தேவையற்ற இந்தியைக் கற்பின், இன்றியமையாத அறிவியற் கல்விக்குப் போதிய காலம் இல்லாமற் போம். (17) ஆங்கில அறிவைக் கொண்டே வடநாடும் சென்று வரலாம்; உலக முழுதுஞ் சுற்றலாம்.

(18) இந்தி பொதுமொழியாகிவிடின், இந்தியா வடக்கில் அகன்றும் தெற்கில் சிறுத்துமிருப்பதால், பிறகாலத்திற் பரும்பான்மைப் பதவிகள் இந்தியார்க்கே சென்று விடும். தமிழன் தன்னாட்டிலும் வெளிநாட்டிலும் பிழைக்க வழியின்றித் தவிப்பான். இந்திக் கல்வியால் அலுவற்பேற்று வாய்ப்புமிகும் என்பது காட்டிக்கொடுப் பவரின் கட்டுச் செய்தியே.

(19) இந்தி பன்மடித் திரிபான கொச்சை மொழியாகும். (20) இந்தி வெறியர் பண்பட்ட மக்களல்லர். இற்றை நிலையிலேயே படையனுப்பி யடக்குவோமென்று அச்சுறுத்துபவர் இந்தி ஆட்சிமொழியானபின் என்ன தான் செய்யத் துணியார்? படைவிடுத் தடக்குவோமென் பது, இந்தியை யெதிர்ப்பவரைச் சுட்டுக் கொல்வோ மென்பதேயன்றி வேறன்று. ஆகவே, வெள்ளையர் பாதக்