உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

55

கூட்டின் கீழ்நசுங்குண்டு சாகும் ரொடேசிய ஆப்பிரிக்கர் நிலைமையினுங் கேடானது வருமுன், தமிழா! விழித்தெழு! உன் தன்மான வாழ்வையும் தமிழ்ப் பண் பாட்டையுங் காத்துக்கொள். இந்தியெதிர்ப்பால் தென்னாடு முழுதுங் கொந்தளிப்பு ஏற்பட்டபின்பும், இருப்புப்பாதைச் சூழ்ச்சியகர்க்கு (Engineers) 'கலைத் தலைவன்' (M. A.) அளவைப்பட்ட இந்தித் தேர்வுத் தேறுகையைத் தகுதியாக நெறியிட்ட இறுமாப்பையும் திமிரையும் எண்ணிப்பார்.

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டம்

1947-ல் ஆங்கிலராட்சி இந்தியாவினின்று நீங்கியதினால் இந்திநாடே முழுவிடுதலை பெற்றது. தமிழ்நாட்டிற்கு ஏற்கெனவே தேவமொழி யென்றிருந்த வடமொழியுடன் இந்தியும் வந்து சேர்ந்தது.

இலக்கிய நடைமொழியான சமற்கிருதத்திற்கும் இந்திக்கும் அளவிறந்த சலுகைகள் காட்டப்பட்டு வருகின்றன. அவ் விரு மொழிகளையும் பரப்பற்கும் வளர்த்தற்கும், தமிழருட்பட்ட பொது மக்கள் வரிப்பணத்தினின்று கோடிக்கணக்கான உருபாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதொறும் ஆகத்துத் தற்சார்பு (Independ- ence) நாளில் தலைமைச் சமற்கிருதப் பண்டிதர்க்குச் சிறப்புச் செய்யப்படுகின்றது. வருவாயற்ற சமற்கிருதப் பெரும் பண்டித ரெல்லார்க்கும், வாழ்க்கைக்குப் போதிய உதவிச் சம்பளம் அளித்து வருகின்றனர். அத்தகைய சிறப்பொன்றும் பண்பட்ட பண்டை யிலக்கியப் பழங்குடி மொழியாகிய தமிழுக்குப் செய்யப் பெறு வதில்லை.

ஆங்கிலர் நீக்கத்தால் தமிழ்நாடு விடுதலை பெற்றுவிட் தென்று கூறுவார் தமிழியல்பை அறிந்த ஒண்மைத் தமிழரல்லர். அறியாமையாலும் அடிமைத்தனத்தாலும் தன்னலத்தாலும் அங்ஙனங் கூறுமாறு அயலாராற் கற்பிக்கப்பட்டவரே.

சிவநெறியும் திருமால் நெறியும் தூய தமிழர் சமயங்களாத லால், கோயில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் தமிழில் நடத்தப் பெறும்வரை, தமிழன் விடுதலை பெற்றவனாகான். தமிழ் தன் நாட்டிலேயே சமற்கிருதத்திற்கு அடிமைப்படுத்தப் பட்டுள்ளது. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை.

மாணவர் இந்தியெதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டு டுதலைப் போராட்டமே. இந்தி நீக்கத்தால் தமிழ்நாடு அரை விடுதலை பெற்றது. இனி, வடமொழி வழிபாடும் நீங்கினால்தான்